சீன ராணுவத்தினரின் பலி எண்ணிக்கை எவ்வளவு? அமெரிக்க உளவுத்துறையின் தகவலால் பெரும் பரபரப்பு
- IndiaGlitz, [Wednesday,June 17 2020]
இந்தியா சீன ராணுவ வீரர்கள் இடையே நேற்று முன்தினம் நள்ளிரவு லடாக் பகுதியில் உள்ள கால்வான் என்ற இடத்தில் நடந்த மோதல் உலக நாடுகளையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்திய சீன எல்லையில் நடந்த இந்த மோதல் காரணமாக இந்திய, சீன எல்லையில் பெரும் பதட்டம் ஏற்பட்டு போர் மேகங்கள் சூழ்ந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு நடந்த இந்த மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர் என்பதும் இன்னும் பலர் படுகாயமடைந்துள்ளனர் என்பதும் அவர்களில் 4 பேர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் செய்திகள் வந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது
அதே நேரத்தில் சீன தரப்பிலும் பல உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளதாகவும் ஆனால் சீனாவின் உயிரிழப்பு குறித்து சீன ராணுவம் இதுவரை அதிகாரபூர்வமான அறிவிப்பை வெளியிடவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்திய சீன வீரர்கள் இடையிலான மோதலில் சீன தரப்பில் 35 பேர் வரை உயிரிழந்தனர் என்ற தகவலை சற்றுமுன் அமெரிக்க உளவுத்துறை வெளியிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
அதுமட்டுமின்றி உயிரிழந்த சீன வீரர்களில் சீன ராணுவத்தின் மூத்த அதிகாரி ஒருவர் என்றும் அமெரிக்க உளவுத்துறை தகவல் அளித்துள்ளது. சீன வீரர்கள் உயிரிழப்பு குறித்து இதுவரை எந்தவிதமான அதிகாரபூர்வ தகவலையும் சீனா அறிவிக்காத நிலையில் அமெரிக்க உளவுத்துறை அறிவித்த இந்த தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது