பச்சை நிறத்தில் பூஞ்சை தொற்று… ஒருவர் பாதிக்கப்பட்டதாக அதிர்ச்சி தகவல்!
- IndiaGlitz, [Wednesday,June 16 2021]
இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே கொரோனா நோய்த்தொற்றில் இருந்து மீண்டவர்களுக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதைக் கட்டுப்படுத்த மருத்துவர்கள் கடுமையாகப் போராடி வருகின்றனர். இந்நிலையில் மத்தியப்பிரதேசத்தில் பச்சை நிறத்திலான புதிய பூஞ்சை நோய்த்தொற்று ஒருவருக்கு பாதிப்பை ஏற்படுத்தி இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூர் பகுதியில் உள்ள அரவிந்தோ மருத்துவமனையில் கடந்த 3 மாதங்களாக விஷால்(34) என்பவர் கொரோனாவிற்கு சிகிச்சை எடுத்து வருகிறார். கொரோனாவினால் அவருடைய நுரையீரல் 90% பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் அதோடு 3 மாதங்களைக் கடந்த பிறகும் அவருக்கு காய்ச்சல் குறையவில்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.
இதனால் சந்தேகம் அடைந்த மருத்துவர்கள் அவருக்கு பூஞ்சை நோய்த்தொற்றுக்கான பரிசோதனையை மேற்கொண்டதாகவும் அதில் விஷாலுக்கு பச்சை பூஞ்சை நோய்த்தொற்று இருப்பதையும் மருத்துவர்கள் உறுதிப்படுத்தி உள்ளனர். இந்தத் தகவல் தற்போது மருத்துவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.