close
Choose your channels

33 வயது தமிழ் நடிகைக்கு இன்று திருமணம்.. வைரல் புகைப்படங்கள்.. குவியும் ரசிகர்களின் வாழ்த்துக்கள்..!

Saturday, June 29, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

33 வயது தமிழ் நடிகைக்கு இன்று திருமணம் நடந்துள்ளதை அடுத்து திருமணம் குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதனை அடுத்து அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கடந்த 2008 ஆம் ஆண்டு ’வால்மிகி’ என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகை மீரா நந்தன் அதன்பிறகு ’அய்யனார்’ ’காதலுக்கு மரணமில்லை’ ’சூரிய நகரம்’ ’சண்டமாருதம்’ ’நேர்முகம்’ உள்ளிட்ட சில தமிழ் படங்களில் பல மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மீரா நந்தன் திருமணம் செய்யப் போகிறார் என்றும் பெற்றோர்கள் மூலம் நிச்சயிக்கப்பட்ட இந்த திருமணம் விரைவில் நடைபெறும் என்று கூறப்பட்டது. அது மட்டும் இன்றி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு திருமணத்துக்கு முந்தைய சடங்குகள் குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை மீரா நந்தன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.

இந்த நிலையில் இன்று காலை கேரளாவில் மீரா நந்தன் ஸ்ரீஜூ திருமணம் நடைபெற்ற நிலையில் இந்த திருமணம் குறித்த புகைப்படத்தை மீராவின் இன்ஸ்டாவில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவருக்கு ரசிகர்களின் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.