33 வருடங்களுக்கு முன் மேஸ்ட்ரோவுடன்: ஏ.ஆர்.ரஹ்மான் நெகிழ்ச்சி

  • IndiaGlitz, [Monday,February 04 2019]

இசைஞானி இளையராஜாவை கவுரவிக்கும் வகையில் பிப்ரவரி 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெற்ற 'திரைக்கொண்டாடம்' நிகழ்ச்சியில் பல திரையுலக, அரசியல் பிரபலங்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். இந்த நிகழ்ச்சியின் ஹைலைட்டான விஷயம் இந்த நிகழ்ச்சியில் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் கலந்து கொண்டதுதான். இரண்டு இசை மேதைகள் ஒரே மேடையில் இருந்த கண்கொள்ளா காட்சியை ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கண்டு மகிழ்ந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய ஏ.ஆர்.ரஹ்மான், 'என்னுடைய தலைமை ஆசிரியர் இளையராஜா. அவரிடம் நான் நிறைய கற்றுக் கொண்டேன். பொதுவாக இசையமைப்பாளர்கள் என்றாலே கெட்ட பழக்கங்கள் இருக்கும். எங்கள் இருவருக்கும் இருக்கும் ஒரே கெட்ட பழக்கம் இசை தான். நான் விருது பெற்றதும் இளையராஜாவின் பாராட்டு தான் மகிழ்ச்சியளித்தது. ஏனென்றால், மேதைகளிடம் இருந்து எளிதில் பாராட்டுக்கள் வராது. அப்படி வந்தால் அது உண்மையான திறமை இருந்தால் தான் வரும். அவரிடம் இருந்து பாராட்டு வந்தது மகிழ்ச்சி என்று கூறினார்.

இந்த நிலையில் 33 வருடங்களுக்கு முன் இளையராஜாவிடம் ஏ.ஆர்.ரஹ்மான் பணிபுரிந்தபோது எடுத்த புகைப்படத்தையும் தற்போது 'இளையராஜா 75' நிகழ்ச்சியில் ஒரே மேடையில் இருவரும் இருந்தபோது எடுத்து கொண்ட புகைப்படத்தையும் பதிவு செய்த ஏ.ஆர்.ரஹ்மான், 'இதுவொரு அற்புதமான அனுபவம்' என்று குறிப்பிட்டு 'எல்லாப்புகழும் இறைவனுக்கே' என்று தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.

 

More News

ரஜினிகாந்த் கருத்துக்கு மறுப்பு தெரிவித்த இளையராஜா

என்னுடைய படங்களை விட கமல்ஹாசன் படங்களுக்குத்தான் இளையராஜா நன்றாக இசையமைத்துள்ளதாக ரஜினிகாந்த் கூறிய கருத்தை மறுத்த இளையராஜா,

வேண்டும் என கூறிய இளையராஜா, வேண்டாம் என கூறிய சாருஹாசன்: கமல்ஹாசன்

சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நேற்று நடைபெற்ற 'இளையராஜா 75' நிகழ்ச்சியில் உலக நாயகன் கமல்ஹாசன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்பட

'தல 59' படம் குறித்த லீக் ஆன செய்தி

தல அஜித் நடித்த 'விஸ்வாசம்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தபோதிலும் அதனை கருத்தில் கொள்ளாமல் அமைதியாக அடுத்த படத்தின் பணியை அவர் தொடங்கிவிட்டார்...

25வது வெற்றி நாள் கொண்டாடிய பேட்ட-விஸ்வாசம் ரசிகர்கள்

தமிழ் திரையுலகில் ஒரே நேரத்தில் இரண்டு பெரிய ஸ்டார்களின் படங்கள் வெளியாகி இரண்டுமே வெற்றி பெறுவது அரிதாகவே நடந்து வரும்...

ரஜினியின் அடுத்த பட கெட்டப் இதுதானா?

ரஜினியின் '166'வது படமான இந்த படம் குறித்த அதிகாரபூர்வ செய்தி இன்னும் வெளிவரவில்லை என்றாலும்...