33 வருடங்களுக்கு முன் மேஸ்ட்ரோவுடன்: ஏ.ஆர்.ரஹ்மான் நெகிழ்ச்சி
Send us your feedback to audioarticles@vaarta.com
இசைஞானி இளையராஜாவை கவுரவிக்கும் வகையில் பிப்ரவரி 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெற்ற 'திரைக்கொண்டாடம்' நிகழ்ச்சியில் பல திரையுலக, அரசியல் பிரபலங்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். இந்த நிகழ்ச்சியின் ஹைலைட்டான விஷயம் இந்த நிகழ்ச்சியில் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் கலந்து கொண்டதுதான். இரண்டு இசை மேதைகள் ஒரே மேடையில் இருந்த கண்கொள்ளா காட்சியை ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கண்டு மகிழ்ந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய ஏ.ஆர்.ரஹ்மான், 'என்னுடைய தலைமை ஆசிரியர் இளையராஜா. அவரிடம் நான் நிறைய கற்றுக் கொண்டேன். பொதுவாக இசையமைப்பாளர்கள் என்றாலே கெட்ட பழக்கங்கள் இருக்கும். எங்கள் இருவருக்கும் இருக்கும் ஒரே கெட்ட பழக்கம் இசை தான். நான் விருது பெற்றதும் இளையராஜாவின் பாராட்டு தான் மகிழ்ச்சியளித்தது. ஏனென்றால், மேதைகளிடம் இருந்து எளிதில் பாராட்டுக்கள் வராது. அப்படி வந்தால் அது உண்மையான திறமை இருந்தால் தான் வரும். அவரிடம் இருந்து பாராட்டு வந்தது மகிழ்ச்சி என்று கூறினார்.
இந்த நிலையில் 33 வருடங்களுக்கு முன் இளையராஜாவிடம் ஏ.ஆர்.ரஹ்மான் பணிபுரிந்தபோது எடுத்த புகைப்படத்தையும் தற்போது 'இளையராஜா 75' நிகழ்ச்சியில் ஒரே மேடையில் இருவரும் இருந்தபோது எடுத்து கொண்ட புகைப்படத்தையும் பதிவு செய்த ஏ.ஆர்.ரஹ்மான், 'இதுவொரு அற்புதமான அனுபவம்' என்று குறிப்பிட்டு 'எல்லாப்புகழும் இறைவனுக்கே' என்று தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.
33 years later with the Maestro, What a great feeling ! #EllamPugazhumIraivanukke pic.twitter.com/CUBATJqsnh
— A.R.Rahman (@arrahman) February 3, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com