33 சிக்ஸர்கள், காணாமல் போன பல பந்துகள்: சிஎஸ்கே-ஆர்.ஆர் போட்டியின் சுவாரஸ்யங்கள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
நேற்று சார்ஜாவில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இடையே நடைபெற்ற போட்டியில் சென்னை அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது என்பது குறித்து ஏற்கனவே பார்த்தோம்
இந்த நிலையில் இந்த போட்டியில் மொத்தம் 33 சிக்ஸர்கள் இரு அணி பேட்ஸ்மேன்களால் அடிக்கப்பட்டுள்ளது நேற்றைய போட்டியில் அதிரடியாக விளையாடி ஆட்டநாயகன் விருதை பெற்ற சஞ்சு சாம்சன் மொத்தம் 9 சிக்ஸர்கள் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஒரே ஒரு பவுண்டரி மட்டுமே அடித்தார் என்பதும் 32 பந்துகளில் 74 ரன்கள் அடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் கேப்டன் ஸ்மித் 4 சிக்ஸர்களையும், கடைசி ஓவரில் ஆர்ச்சர் நான்கு சிக்ஸர்களையும், அடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
அதேபோல் சென்னை அணியின் டூபிளஸ்சிஸ் 7 சிக்சர்களை அடித்து உள்ளார். மேலும் வாட்சன் 4 சிக்சர்களையும், கடைக்குட்டி சிங்கம் சாம் கர்ரன் 2 சிக்சர்களையும், கடைசி ஓவரில் தல தோனி 3 சிக்சர்களை அடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
அதுமட்டுமின்றி நேற்று பேட்ஸ்மேன்களால் அடிக்கப்பட்ட பெரும்பாலான சிக்ஸர்களில் பந்து மைதானத்தை விட்டு வெளியே சென்றது என்பதும் கிட்டத்தட்ட 10க்கும் மேற்பட்ட பந்துகள் நேற்று காணாமல் போனதும் ஒரு சுவராசியமான தகவல் என்பது குறிப்பிடத்தக்கது
ஒரே போட்டியில் 33 சிக்ஸர்கள் அடிக்கப்பட்ட கண்கொள்ளா காட்சியை நேரில் பார்க்க முடியாமல் போனதாக ரசிகர்கள் ஆதங்கப்பட்டு கொண்டிருக்கின்றனர்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com