தமிழகத்தில் மேலும் 33 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகத்தில் ஏற்கனவே நைஜீரியாவில் இருந்துவந்த ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில் தற்போது வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 33 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த நவம்பர் 24 ஆம் தேதி தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் நோய்த்தொற்று அதிக வேகத்தில் உலக நாடுகளில் பரவி வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் இதுவரை 269 பேருக்கு ஒமைக்ரான் நோய்த்தொற்று கண்டறியப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நைஜீரியாவில் இருந்து சென்னை வந்த ஒரு நபருக்கு ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது.
இதையடுத்து பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்ட நிலையில் தற்போது வெளிநாடுகளில் இருந்து சென்னை வந்த 104 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிச்செய்யப்பட்டு உள்ளது. மேலும் இவர்களுக்கு ஒமைக்ரான் வகை வைரஸ் பாதிப்பு இருக்கிறதா? என்பதைக் கண்டறிய அதிகாரிகள் ஜீன் பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதில் S ஜீன் இல்லாத 54 பேரை மட்டும் பிரித்தெடுத்து அவர்களுக்கு மேலும் ஒமைக்ரான் வகை வைரஸ் பாதிப்பு இருக்கிறதா? என்பதை கண்டறியும் சோதனை மேற்கொள்ளப்பட்து. இந்தச் சோதனையில் முதல் கட்டமாக 34 பேரின் முடிவுகள் வெளியான நிலையில் 33 பேருக்கு ஒமைக்ரான் வகை வைரஸ் பாதிப்பு இருப்பது தற்போது உறுதிச்செய்யப்பட்டு உள்ளது. இவர்கள் அனைவருக்கும் அறிகுறியே இல்லாமல் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் 20 பேரின் முடிவுகள் விரைவில் வெளியாகும் எனவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். முன்னதாக மகாராஷ்டிரா மற்றும் டெல்லியில் அதிக ஒமைக்ரான் பாதிப்புகள் கண்டறிப்பட்டு இருந்த நிலையில் தற்போது தமிழகத்தில் 3 ஆவதாக அதிகளவு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டு இருப்பது அதிகாரிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com