13 வயது சிறுவனை 2 வருடங்களாக பாலியல் டார்ச்சர் செய்த 31 வயது பெண்: போக்சோவில் கைது! 

13 வயது சிறுவனை இரண்டு வருடங்களாக 31 வயது விதவை பெண் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் போலீசார் அந்த பெண்ணை கைது செய்து போக்சோ சட்டத்தில் சிறையில் அடைத்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பகுதியை சேர்ந்த 31 வயது பெண் ஒருவரின் கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இறந்துவிட்டார். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த 13 வயது சிறுவன் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் பெண்ணின் வீட்டில் இருந்த மாமரத்தின் மீது கல்லெறிந்து உள்ளான். இதனால் அந்தப் பெண்ணின் வீட்டில் உள்ள ஜன்னல் கண்ணாடி உடைந்து உள்ளது.

இதனை அடுத்து அந்த சிறுவனை அழைத்து மிரட்டிய அந்த பெண் 2000 ரூபாய் ஜன்னல் கதவுகள் சேதத்திற்கு எடுத்து வா என்று மிரட்டியுள்ளார். இதனையடுத்து அந்த சிறுவன் வீட்டிற்கு தெரியாமல் 2000 ரூபாய் திருடி அந்த பெண்ணிடம் கொடுத்துள்ளான். இதேபோல் பல முறை பணம் கேட்டு மிரட்டியதாக தெரிகிறது. ஒரு கட்டத்தில் அந்த சிறுவனை பாலியல் தொல்லை செய்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் வீட்டில் அடிக்கடி பணம் திருடு போனதால் சிறுவனின் வீட்டில் உள்ளவர்கள் சிறுவனை பிடித்து விசாரித்தபோது, ஒரு கட்டத்தில் அழுது கொண்டே சிறுவன் உண்மையைச் சொல்லிவிட்டான். இதன் பின்னர் போலீசில் சிறுவனின் பெற்றோர் புகார் செய்துள்ளனர். அப்போது கடந்த இரண்டு வருடங்களாக அதாவது சிறுவன் 11 வயதாக இருக்கும்போதில் இருந்தே அந்த சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தது விசாரணையில் தெரியவந்தது.

இதனை அடுத்து அந்தப் பெண் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 13 வயது சிறுவனை கடந்த இரண்டு வருடங்களாக 31 வயது பெண் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்து வந்த சம்பவம் சிவகங்கை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

More News

கள்ளக்காதலிக்கு ஜிமிக்கி வாங்க வாலிபர் செய்த திருட்டு: சிசிடிவியால் சிக்கியதால் பரபரப்பு

மனைவி குழந்தைகளை ஊருக்கு அனுப்பிவிட்டு கள்ளக்காதலிக்கு ஜிமிக்கி, கம்மல் வாங்குவதற்காக சின்ன சின்ன திருட்டுகளில் ஈடுபட்ட சென்னை வாலிபர் ஒருவர் சிசிடிவி வீடியோவால் சிக்கியுள்ள சம்பவம்

தமிழகத்தில் மும்மொழிக் கொள்கை அமல்படுத்தப்படாது: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி

மத்திய அரசு சமீபத்தில் புதிய கல்விக் கொள்கை திட்டத்தை அறிவித்த நிலையில் இந்த திட்டத்திற்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் உள்பட பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் 

மறுபடியும் நிலநடுக்கம்… நிலைகுலைந்து போன பப்புவா நியூ கினியா!!!

இந்தோனேசியாவிற்கு அருகில் இருக்கும் தீவு நாடான பப்புவா நியூ கினியாவிற்கு அடிமேல் அடி விழுந்து கொண்டே இருக்கிறது

2 பேர் செய்த சேட்டையால் நடுவானில் பறந்த விமானத்தையே திருப்பிய பைலட்!!! சுவாரசியத் தகவல்!!!

அமெரிக்காவின் விமான சேவை நிறுவனமான டெல்டா விமானம் கடந்த ஜுலை 23 ஆம் தேதி டிட்ரோய்ட் மாகாணத்தில் இருந்து ஜார்ஜியா மாகாணத்தின் அட்லாண்டா விமானத் தளத்திற்கு பயணிகளுடன் புறப்பட்டது.

ஊராட்சி மன்ற தலைவருடன் தனிமையில் பெண் வி.ஏ.ஓ: பொதுமக்கள் உதவியால் கதவை பூட்டிய கணவர்

ஊராட்சி மன்ற தலைவரின் வீட்டில் தனிமையில் பெண் விஏஓ இருந்ததை அறிந்த அவரது கணவர் பொதுமக்கள் உதவியுடன் வீட்டை வெளியே பூட்டியதால் சிவகங்கை அருகே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது