தமிழகத்தில் குறைகிறது கொரோனா பாதிப்பு: இன்று பாதித்தவர்களின் எண்ணிக்கை குறித்த தகவல்

கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து தினமும் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்து வரும் நிலையில் சற்றுமுன் இன்று தமிழகத்தில் மேலும் 31 பேர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் மொத்த எண்ணிக்கை 1204ஆக உயர்ந்துள்ளது. இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 21 பேர் டெல்லி மாநாட்டில் இருந்து திரும்பியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தமிழகத்தில் வீட்டு கண்காணிப்பில் இருப்பவர்களின் எண்ணிக்கை 28,711 பேர் இருப்பதாகவும், அரசு கண்காணிப்பில் 135 பேர் இருப்பதாகவும், 28 நாட்கள் தனிமைப்படுத்துதலை முடித்தவர்கள் 88,529 பேர்கள் என்றும் இதுவரை பரிசோதனை செய்தவர்களின் எண்ணிக்கை 19,255 என்றும் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

நேற்று ஒரே நாளில் கொரோனா வைரஸ் 98 பேர்களை தாக்கிய நிலையில் இன்று மூன்றில் இரண்டு மடங்கு குறைந்துள்ளது தமிழக மக்களுக்கு பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

More News

தமிழகம் உள்ளிட்ட 3 மாநிலங்களில் வெளவால்களுக்கும் கொரோனா! அதிர்ச்சி தகவல்

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மனித இனத்தையே ஆட்டுவித்து வரும் நிலையில் சமீபத்தில் அமெரிக்காவில் உள்ள மிருகக்காட்சி சாலையில் உள்ள புலி மற்றும் சிங்கங்களுக்கும் கொரோனா

தூய்மை பணியாளர்களுக்காக ராகவா லாரன்ஸ் கொடுத்த மிகப்பெரிய தொகை!

நடிகரும் நடன இயக்குனருமான ராகவா லாரன்ஸ் ஏற்கனவே ரூ.3 கோடி கொரோனா தடுப்பு நிதியாக வழங்கியுள்ளார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் கொரோனா நேரத்தில் இரவு பகல் பாராது

அட்லியின் அடுத்த படத்தில் இடம்பெற்ற 'மாஸ்டர்' வசனம்!

அட்லி தயாரிப்பில் உருவாகிய படத்தின் டைட்டில் 'அந்தகாரம்' என்றும், இந்த படத்தின் டிரைலர் இன்று வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது என்பதும் தெரிந்ததே

வெளிநாட்டு தமிழர்களுக்கு ரஜினிகாந்த் கூறிய அறிவுரை மற்றும் வாழ்த்துக்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கடந்த சில மணி நேரத்திற்கு முன்பாக தமிழர்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தனது சமூக வலைப்பக்கத்தில் தெரிவித்தார்

தேமுதிக சார்பில்‌ 5 கோடி ரூபாய்க்கு நிவாரண பொருட்கள், ஆனால்... விஜயகாந்த் அறிக்கை

ஊரடங்கு உத்தரவு காரணமாக பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு திரையுலகினர்களும், அரசியல் கட்சிகளும், தன்னார்வலர்களும் தாராளமாக நிதியுதவி செய்து வருகின்றனர்.