மூணாறு நிலச்சரிவு: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 31 தமிழர்கள் உயிரிழந்த சோகம்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
கேரளாவின் இடுக்கி மாவட்டம் மூணாறு பகுதியை அடுத்த ராஜமலா, பெட்டிமாடா பகுதியில் கடந்த ஆகஸ்ட் 7 ஆம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 31 தமிழர்கள் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. கேரளாவின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக தென்மேற்கு பருவமழை வலுத்து வருகிறது. இதனால் வயநாடு, இடுக்கி, பத்தனம் திட்டா பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக கேரளா முழுவதும் கடும் வெள்ளம் சூழந்து இருப்பதகாவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இடுக்கி மாவட்டத்திலுள்ள பெட்டிமாடா கிராமத்தின் தனியார் எஸ்டேட் ஒன்றில் வேலை பார்ப்பதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த 78 பேர் 20 தற்காலிகக் குடியிருப்புகளில் தங்க வைக்கப் பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அவர்கள் ஆகஸ்ட் 7 தேதி காலை 5 மணிக்கு ஏற்பட்ட நிலச்சரிவில் அனைவரும் மண்ணோடு மண்ணாகப் புதைந்து விட்டதாகப் பரபரப்பு ஏற்பட்டது. முதற்கட்டமாக அவர்களை மீட்க வந்த பேரிடர் மீட்புக்குழு 3 பேரை மட்டுமே உயிருடன் மீட்டது. அங்கு தொடர்ந்து பெய்து வந்த கனமழையால் மற்றவர்களை மீட்கும் பணியில் தொய்வு ஏற்பட்டதாகவும் கவலை தெரிவிக்கப் பட்டது.
அடுத்து ஆகஸ்ட் 8 ஆம் தேதி நிலச்சரிவில் மாட்டிய 13 பேர் உயிருடன் மீட்கப்பட்டதாகவும் மேலும் 17 இறந்த உடல்கள் மீட்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின. பின்னர் நேற்று (ஆகஸ்ட் 9) ஆம் தேதி 10 உடல்கள் மீட்கப்பட்டதாகவும் இன்று (ஆகஸ்ட் 10) ஆம் தேதி 16 உடல்கள் மீட்கப்பட்டதாகவும் மற்ற 19 பேரின் நிலைமையைக் குறித்து கவலை எழுந்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் மூணாறு பகுதியின் முன்னாள் பஞ்சாயத்து உறுப்பினரான பெட்டிமுடா பகுதியைச் சார்ந்த அனந்தசிவனும் (58) நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் தங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது. அவரோடு சேர்ந்து அவரது மனைவி வேலுத்தாயி (55), அவரது மகன் பாரதிராஜா (35), மருமகன் (26) என அடுத்தடுத்த குடிசைகளில் வசித்து வந்த அவருடைய குடும்பத்தைச் சேர்ந்த 31 பேர் தங்கியிருந்ததாகவும் அவர்கள் அனைவரும் இந்த நிலச்சரிவில் உயிரிழந்து விட்டதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கிறது.
ஒரே குடும்பத்தை சார்ந்த 31 பேர் உயிரிழப்பு என்பதும் கடும் அச்சத்தை ஏற்படுத்துகிறது. இந்நிலையில் தமிழகத்தைச் சார்ந்த கோவில்பட்டி மாவட்டம் கயத்தாறு பகுதியில் இருந்து மட்டுமே தமிழர்கள் அங்கு தங்கியிருந்ததாகக் கூறப்பட்ட நிலையில் தற்போது கயத்தாறு மட்டுமல்லாது, ராஜபாளையம், பரமக்குடி, தென்காசி, பாஞ்சாலங்குறிச்சி மற்றும் சென்னையைச் சேர்ந்த ஒரு குடும்பமும் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் தங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது.
இதைவிட இன்னொரு மிகப்பெரிய சோகம். காணமால் போன 19 பேர் குறித்து பேரிடர் மீட்பு குழுவினர் தெரிவிக்கும் தகவல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக அமைந்திருக்கிறது. அவர்கள் அனைவரும் மிக இளவயதுடைய பள்ளி மாணவர்கள் என்றும் பெட்டிமாடா அருகில் இருந்த அரசு பள்ளியில் 10 மற்றும் 11 ஆம் வகுப்பு படித்து வந்த 19 பேரைத்தான் இப்போது மீட்புக்குழுவினர் தேடிவருவதாகவும் கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout