30 வருட திருமண வாழ்க்கை: பிரபல நட்சத்திர ஜோடி பகிர்ந்த புகைப்படம் வைரல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல நட்சத்திர ஜோடி தங்களது 30வது திருமண நாளை நேற்று கொண்டாடிய நிலையில் இது குறித்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா மற்றும் தமிழ் தெலுங்கு நடிகை அமலா ஆகிய இருவரும் கடந்த 1992ஆம் ஆண்டு ஜூன் 11ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். நேற்று இந்த நட்சத்திர ஜோடியின் 30வது திருமண நாள் கொண்டாடப்பட்டது. இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது
இது குறித்து நாகார்ஜுனா தனது சமூக வலைத்தளத்தில், இன்று அமலாவுக்கும் எனக்கும் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி!! இந்த 30 வருட ஒற்றுமை இன்னும் பல வருடங்கள் நீடிக்க உங்கள் அன்பும் ஆசியும் தேவை’ என்று கூறியுள்ளார்.
நடிகை அமலா கடந்த 1986-ம் ஆண்டு டி ராஜேந்தர் இயக்கிய ‘மைதிலி என்னை காதலி’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். ரஜினிகாந்த் நடித்த ‘வேலைக்காரன்’ ’மாப்பிள்ளை’ கமல்ஹாசனுடன் ’சத்யா’ ’வெற்றிவிழா’ உள்பட பல படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் 30வது திருமண நாளை கொண்டாடிய நட்சத்திர ஜோடி நாகார்ஜூனா-அமலாவுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Thank you all for love and blessings showered on Amala& me today!!
— Nagarjuna Akkineni (@iamnagarjuna) June 11, 2022
30 years of togetherness and many more to come with your wishes!!?????? pic.twitter.com/nMXhJyMDUa
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments