ஒருநாளைக்கு எத்தனை ரசிகர்கள் அஞ்சலி செலுத்துகிறார்கள்? ஒரு ஆச்சரியமான தகவல்!

  • IndiaGlitz, [Monday,November 08 2021]

சமீபத்தில் காலமான புனித் ராஜ்குமார் சமாதியில் தினமும் 30 ஆயிரம் ரசிகர்கள் வந்து அஞ்சலி செலுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் கடந்த வாரம் திடீரென மாரடைப்பு காரணமாக காலமானார். அவரது மறைவு கன்னட திரையுலகம் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்திய திரையுலகிற்கு மிகப்பெரிய இழப்பாக கருதப்பட்டது.

இந்த நிலையில் ஒரு நடிகரின் மறைவு என்றால் ஓரிரு நாட்களில் அந்த நடிகரின் ரசிகர்கள் மறந்துவிட்டு வேலையை பார்க்க ஆரம்பித்து விடுவார்கள். ஆனால் புனித் ராஜ்குமாரை கர்நாடக மாநில மக்கள் நடிகராக மட்டுமின்றி தங்களுடைய வீட்டில் உள்ள உறுப்பினர்களில் ஒருவராக கருதுகின்றனர். அதன் காரணமாக புனித் இழப்பை தாங்க முடியாமல் தினந்தோறும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அவரது சமாதிக்கு வந்து அஞ்சலி செலுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கர்நாடக மாநில காவல்துறை மற்றும் மத்திய காவல் துறையினர் தினமும் 24 மணி நேரமும் புனித் ராஜ்குமார் சமாதிக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர் என்பதும் கட்டுக்கடங்காமல் வரும் ரசிகர்களின் கூட்டத்தை அவர்கள் கட்டுப் படுத்தி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நடிகராக மட்டுமின்றி கர்நாடக மாநில மக்களின் நல்வாழ்விற்காக அவர் பல்வேறு சமூக சேவைகளை அவர் செய்ததால்தான் அவர் மறைந்து பத்து தினங்கள் ஆகியும் அவருக்கு அஞ்சலி செலுத்த கூட்டம் குவிந்து கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'அண்ணாத்த' திரைப்படத்தை திருப்பாச்சி'யுடன் ஒப்பீடு குறித்து பேரரசு பதில்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'அண்ணாத்த' திரைப்படம் கடந்த தீபாவளியன்று வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது என்பதும் இந்த படம் மூன்றே நாட்களில் தமிழகத்தில் மட்டும்

அல்லு அர்ஜூன் மகனின் அட்டகாசமான மாஸ் வீடியோ வைரல்!

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனின் மகன் அட்டகாசமான மாஸ் மீடியா ஒன்று இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 

டாக்டர் நண்பருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய சமந்தா: வைரல் புகைப்படங்கள்!

பிரபல நடிகை சமந்தா தனது டாக்டர் நண்பருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

சமந்தாவை தொடர்ந்து இளம் நடிகையின் புது முயற்சி… வைரல் புகைப்படம்!

சமீபத்தில் நடிகை சமந்தா கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கலை வழியாக புத்துணர்ச்சி மற்றும் நம்பிக்கை

அணியில் இடம்பெற லஞ்சமா? உள்நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் மீதான பகீர் குற்றச்சாட்டு!

கிரிக்கெட் விளையாட்டில் வீரர்களின் தேர்வுக்கு பணம் வாங்கியதாகக் கூறப்படும் புகாரில் 3 உள்நாட்டு கிரிக்கெட் வாரியங்கள்