கொரோனா: வதந்தியை நம்பி ஆல்கஹால் குடித்த 300 பேர் பரிதாப பலி
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஈரான் நாட்டில் மது குடித்தால் கொரோனா குணமாகிவிடும் என்று கிளம்பிய வதந்தியின் காரணமாக கள்ளச்சாராயம் குடித்த நூற்றுக்கும் மேற்பட்டோர் பரிதாபமாக மரணம் அடைந்தார்கள் என்ற செய்தியை பார்த்தோம். இந்த நிலையில் இந்த அதிர்ச்சியை நீங்குவதற்கு முன்பே அதே நாட்டில் ஆல்கஹாலை குடித்தால் கொரோனா குணமாகும் என்ற வதந்தியை நம்பி 300க்கும் மேற்பட்டோர் மெத்தனால் கலந்த ஆல்கஹாலை குடித்து பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரான் நாட்டில் ஏற்கனவே 29 ஆயிரம் பேர்களை கொரோனா தாக்கியுள்ளது. அந்த நாட்டில் மட்டும் 2,200 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கொரோனாவில் இருந்து எப்படியாவது தப்பிக்க வேண்டும் என அந்நாட்டு மக்கள் தீவிரமாக உள்ளனர்.
இந்த நிலையில் ஆல்கஹால் குடித்தால் கொரோனா தாக்காது என்று ஈரான் ஊடகம் ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளது. இதனை நம்பி ஆல்கஹால் குடித்த 300 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் ஆயிரத்துக்கும் அதிகமானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. ஈரானில் ஆல்கஹால் தடை செய்யப்பட்ட நிலையில் இத்தனை பேருக்கு ஆல்கஹால் எப்படி கிடைத்தது என்பது புரியாத புதிராக உள்ளது.
இன்னும் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்பதால் இதுபோன்ற வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும் மருத்துவரின் ஆலோசனை இன்றி யாரும் தாங்களாகவே சிகிச்சை செய்ய வேண்டாம் என்றும் ஈரான் அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout