கேரளாவில் ஒரே நாளில் ரிலீஸ் ஆகும் 30 விஜய் படங்கள்
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் பிறந்த நாளுக்கு இன்னும் ஒருவாரமே இருக்கும் நிலையில், அவரது ரசிகர்கள் இந்த ஆண்டு விஜய் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். தூத்துகுடி துப்பாக்கி சூடு சோகம் காரணமாக இந்த ஆண்டு விஜய் தன்னுடைய பிறந்த நாளை கொண்டாட போவதில்லை என்று கூறிவிட்டாலும், அவரது ரசிகர்கள் வழக்கம் போல் கொண்டாட திட்டமிட்டுள்ளனர்.
குறிப்பாக விஜய்க்கு தமிழகத்திற்கு இணையாக கேரளாவில் லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளன என்பது தெரிந்ததே. வழக்கம்போல் இந்த வருடமும் கேரளாவில் உள்ள விஜய் ரசிகர்கள் ஜூன் 22ஆம் தேதியை ஒரு திருவிழா போல் கொண்டாட முடிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் கேரளாவில் உள்ள 30 நகரங்களில் உள்ள திரையரங்குகளில் விஜய்யின் சூப்பர் ஹிட் படங்கள் ஜூன் 22ஆம் தேதி மீண்டும் ரிலீஸாகவுள்ளது குறிப்பாக கில்லி, போக்கிரி, தெறி, துப்பாக்கி, திருமலை, சச்சின், கத்தி, சச்சின், சிவகாசி, வேலாயுதம், மெர்சல், ஆகிய படங்கள் திரையிடப்படவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. தமிழகத்திலும் பல திரையரங்குகளில் ஜூன் 22ஆம் தேதி விஜய் படங்கள் சிறப்பு காட்சிகளாக வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments