'லியோ'வில் 30 விதமான லுக்கில் விஜய்? ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ்..!

  • IndiaGlitz, [Thursday,March 16 2023]

’லியோ’ படத்தில் நடித்து வரும் விஜய்க்கு 30 விதமான ஹேர்ஸ்டைல் லுக் பரிசீலனை செய்யப்பட்டு அதில் ஒன்றுதான் தேர்வு செய்யப்பட்டதாகவும் அந்த லுக்கில் தான் தற்போது அவர் இந்த படத்தில் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

சமீபத்தில் ’லியோ’ படத்தின் படப்பிடிப்பில் சஞ்சய் தத் இணைந்த போது அவரை வரவேற்ற விஜய்யின் வீடியோ வெளியானது என்பதும் அதில் விஜய்யின் ஹேர்ஸ்டைல் வித்தியாசமாக இருந்ததை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்தார்கள் என்பதும் தெரிந்ததே

பொதுவாக ஹேர் ஸ்டைலில் பெரிய மாற்றம் செய்யாத விஜய் இந்த படத்தில் லோகேஷ் கனகராஜ் கேட்டுக் கொண்டதற்காக வித்தியாசமான ஹேர் ஸ்டைலை ஏற்றுக் கொண்டதாகவும் குறிப்பாக அவருக்கு 30 விதமான ஹேர் ஸ்டைல் லுக் சோதனை செய்யப்பட்டு கடைசியில் இந்த லுக் தான் தேர்வு செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி இந்த படத்தில் அவர் வேறு சில லுக்கிலும் தோன்ற வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. மொத்தத்தில் இந்த படம் திரையில் வெளியாகும் போது ரசிகர்களுக்கு விஜய்யின் லுக் மிகப்பெரிய சர்ப்ரைசாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

’மாஸ்டர்’ என்ற சூப்பர் ஹிட் படத்திற்கு பிறகு விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் மீண்டும் இணைந்துள்ளதை அடுத்த இந்த படத்திற்கு இப்போதே மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே ரூ.500 கோடிக்கும் மேல் இந்த படத்தின் பிசினஸ் முடிந்து விட்டது என கூறப்படுகிறது.

விஜய், த்ரிஷா, சஞ்சய்தத், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மிஷ்கின், மன்சூர் அலிகான், மாத்யூ தாமஸ், கௌதம் மேனன் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் ஆகியோர் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை பெரும் பொருட்செலவில் லலித தயாரித்து வருகிறார். அனிருத் இசையில் பிலோமின் ராஜ் படத்தொகுப்பில், சதீஷ்குமார் கலை இயக்கத்தில், அன்பறிவ் ஸ்டண்ட் இயக்கத்தில், தினேஷ் நடன இயக்கத்தில் இந்த படம் உருவாகி வருகிறது.

More News

காஷ்மீருக்கு பின் அடுத்தகட்ட படப்பிடிப்பு எங்கே? 'லியோ' குறித்த மாஸ் தகவல்..!

தளபதி விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகி வரும் திரைப்படம் 'லியோ'. இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் கொடைக்கானலில் நடந்த நிலையில்

அருள்நிதி அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக்: கையில் அரிவாளுடன் ஆவேசமான ஃபர்ஸ்ட்லுக்..!

 தமிழ் திரை உலகின் இளைய தலைமுறை நடிகர்களில் ஒருவரான அருள்நிதி நடிக்க இருக்கும் அடுத்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் வெளியாகியுள்ள நிலையில் கையில் அருவாளுடன் ஆவேசமாக

இளவரசி டயானா கைது செய்யப்பட்டாரா? வரலாற்றைக் கிளறும் ஆச்சர்ய தகவல்!

உலகம் மக்களால் விரும்பப்பட்ட இங்கிலாந்து இளவரசி டயானா ஒருமுறை போலீஸாரால் கைது செய்யப்பட்டார் எனும் தகவல் வெளியாகி இருக்கிறது.

'நான் சந்தித்த அற்புதமான மனிதர்: 'சந்திரமுகி 2' கடைசி நாளில் கங்கனா ரனாவத் புகழாரம்..!

ராகவா லாரன்ஸ் நடிப்பில், பி வாசு இயக்கத்தில் உருவாகி வரும் 'சந்திரமுகி 2' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் பிரபல பாலிவுட் நடிகை

'டாடா' வெற்றியை அடுத்து கவினின் அடுத்த படம்.. இயக்குனர் இந்த பிரபலமா?

கவின் நடித்த 'டாடா' திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் இந்த படத்தின் வசூல் அனைத்து தரப்பினருக்கும் லாபத்தை கொடுக்கும் வகையில் இருப்பதாக