30 லட்சத்தைத் தாண்டிய கொரோனா உயிரிழப்பு… அதிர்ச்சி ரிப்போர்ட்!
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் உருவான கொரோனா வைரஸ் பின்னர் உலகம் முழுவதும் பெருந்தொற்றாக மாறி தற்போது உலகையே ஸ்தம்பிக்க வைத்து உள்ளது. இந்தப் பெருந்தொற்றினால் உலகம் முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 லட்சத்து 14 ஆயிரத்து 420 ஆக அதிகரித்து உள்ளது என்றும் உக்ரைன், வெனிசுலா போன்ற நாடுகளின் ஒட்டுமொத்த மக்கள் தொகையின் எண்ணிக்கையே இவ்வளவுதான் என்றும் ஜான் ஹாப்பின்ஸ் பல்கலைகக் கழகம் புள்ளிவிவரம் வெளியிட்டு இருக்கிறது.
ஜான் ஹாப்பின்ஸ் பல்கலைக் கழகம் வெளியிட்டு உள்ள இந்த உயிரிழப்பு எண்ணிக்கையைத் தாண்டி இன்னும் பல ஆயிரக்கணக்கான மக்கள் கொரோனா பாதிப்பினால் உயிரிழந்து இருக்கலாம் என்ற கருத்தக் கணிப்பும் இருந்து வருகிறது. அதோடு கிவ், உக்ரைன், வெனிசுலா, லிஸ்பன், போர்ச்சுகல் போன்ற நாடுகளில் உள்ள ஒட்டுமொத்த மக்கள் தொகையே கிட்டத்தட்ட 30 லட்சத்தைத் தான் நெருங்குகிறது.
இப்படி ஒரு நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் தொகை அளவிற்கு மக்கள் உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பினால் உயிரிழந்து உள்ளனர் என்ற ரிப்போர்ட்டும் தற்போது மருத்துவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அமெரிக்காவின் மாநிலங்களான பிலடெல்பியா, டாலஸ் போன்ற மாநிலங்களின் ஒட்டுமொத்த மக்கள் தொகையும் 30 லட்சத்தை ஒட்டித்தான் இருக்கிறது. இந்நிலையில் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அமெரிக்க முதல் இடத்தைப் பிடித்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாக ஜான் ஹாப்பின்ஸ் பல்கலைக் கழகம் சுட்டிக் காட்டி இருக்கிறது.
மேலும் அமெரிக்காவைத் தவிர இந்தியா, பிரேசில், பிரான்ஸ் போன்ற நாடுகளில் தற்போது கொரோனா பாதிப்பும் உயிரிழப்பும் அதிகரித்து வருவதாக அந்த ரிப்போர்ட் சுட்டிக் காட்டி இருக்கிறது. மேலும் உலகம் முழுவதும் உயிரிழந்து இருப்பதாகக் கூறப்படும் 30 லட்சம் பேரில் கிட்டத்தட்ட 5 இல் ஒரு பங்கு மக்கள் அமெரிக்காவை சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout