விஜய்சேதுபதி-த்ரிஷாவுக்காக இயக்குனர் தேர்வு செய்த 30 இடங்கள்
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய்சேதுபதி மற்றும் த்ரிஷா முதல்முறையாக இணைந்து நடிக்கும் '96' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்திற்காக இயக்குனர் பிரேம்குமார் 30 லொகேஷன்களை தேர்வு செய்து வைத்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஹிமாச்சலபிரதேசத்தில் உள்ள ஸ்பிட்டி பள்ளத்தாக்கு, ராஜஸ்தான் மற்றும் கொல்கத்தா ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளது.
மேலும் அடுத்த கட்ட படப்பிடிப்பு கும்பகோணத்தில் நடைபெறவுள்ளதாகவும், இந்த படப்பிடிப்பில் த்ரிஷா கலந்து கொள்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோன்று 30 லோகேஷன்களை இயக்குனர் தேர்வு செய்து வைத்துள்ளார்.
'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' ஒளிப்பதிவாளர் பிரேம்குமார் இயக்கும் இந்த படத்திற்கு கோவிந்த் மேனன் என்பவர் இசையமைக்கின்றார். மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் நந்தகோபால் தயாரிக்கும் இந்த படத்திற்கு சண்முகசுந்தரம் ஒளிப்பதிவும், கோவிந்த்ராஜ் படத்தொகுப்பு பணிகளையும் செய்யவுள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments