பணம் கட்டத் தவறியதால் பரிதாபமாக பலியான 30 குழந்தைகள்
- IndiaGlitz, [Saturday,August 12 2017]
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் கடந்த இரண்டு நாட்களில் சிகிச்சை பெற்று 30 குழந்தைகள் பலியானது அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இந்த சம்பவத்திற்கு பல காரணங்கள் கூறப்பட்டு வரும் நிலையில் ஆக்சிஜன் சப்ளை செய்து வந்த நிறுவனத்திற்கு பில் செட்டில் செய்யாததால் ஆக்சிஜன் சப்ளை நிறுத்தப்பட்டதாகவும், இதனால் தான் 30 குழந்தைகள் பலியானதாகவும் திடுக்கிடும் தகவல் வெளிவந்துள்ளது.
சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு கடந்த 1ஆம் தேதியே ரூ.64 லட்சம் பில் செட்டில் செய்யும் கடிதம் ஆக்சிஜன் சப்ளை செய்யும் நிறுவனத்திடம் இருந்து அனுப்பப்பட்டதாகவும், பில்தொகை குறித்த காலத்திற்குள் வரவில்லை என்றால் ஆக்சிஜன் சப்ளை நிறுத்தப்படும் என்று அதில் எச்சரிக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த எச்சரிக்கையை மருத்துவமனை நிர்வாகம் கண்டுகொள்ளாததால் ஆக்சிஜன் சப்ளை நிறுத்தப்பட்டதாகவும், இதன் காரணமாகவே 30 குழந்தைகளின் விலை மதிப்பில்லா உயிர்கள் பறிபோனதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.
இந்த நிலையில் 30 குழந்தைகள் மரணமடைந்ததற்கு பொறுப்பேற்று உபி முதல்வர் ஆதித்யாநாத் ஆகியோர் பதவிவிலக வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து உபி மாநில துணை முதல் மந்திரி கேஷவ் பிரசாத் மவுரியா அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியபோது, 'குழந்தைகள் பலியான விவாகரத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.