ஆம்புலன்ஸ் கிடைக்காததால் உயிரிழந்த 3 வயது குழந்தை: அதிர்ச்சியில் தாய்

பிகார் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணின் 3 வயது குழந்தை ஆம்புலன்ஸ் கிடைக்காததால் பரிதாபமாக உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பீகார் மாநிலத்தில் உள்ள ஜெகனாபாத் என்ற பகுதியில் உள்ள ஒரு தம்பதியின் 3 வயது குழந்தைக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனது. இதனையடுத்து அந்த குழந்தையை மருத்துவமனையில் அனுமதிக்க ஆம்புலன்ஸ்க்கு தகவல் அனுப்பப்பட்டது. ஆனால் ஆம்புலன்ஸ் அனுப்ப மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து அந்த குழந்தையை மார்போடு அணைத்தபடி அந்த குழந்தையை தாய் அழுது கொண்டே மருத்துவமனைக்கு தூக்கி ஓடினார். இருப்பினும் அவர் மருத்துவமனையை அடையும் முன்னரே குழந்தை இறந்து விட்டதாக தெரிகிறது. இதனை அடுத்து ஆம்புலன்ஸ் சரியான நேரத்தில் கிடைக்காததால்தான் அந்த குழந்தை இறந்துவிட்டதாக குழந்தையின் தந்தை குற்றம்சாட்டினார்.

இதுகுறித்து உரிய விசாரணை செய்து, ஆம்புலன்ஸ் மறுக்கப்பட்டது தெரியவந்தால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. ஆம்புலன்ஸ் கிடைக்காததால் 3 வயது குழந்தையின் உயிரை காப்பாற்ற முடியாத இந்த சோக சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

More News

லோகேஷ் கனகராஜின் அடுத்த படம் குறித்த தகவல்

தளபதி விஜய், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் உள்பட பலர் நடித்து முடித்துள்ள 'மாஸ்டர்' படத்தை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ்,

கொரோனா; பிளாஸ்மா சிகிச்சையில் வெற்றிக் கண்ட இந்திய மருத்துவர்கள்!!! அடுத்து என்ன???

கொரோனா சிகிச்சையில் தடுப்பு மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கப்படாத நிலையில் சீனா, தென் கொரியா போன்ற நாடுகள் கொரோனா பாதித்த நபர்களின் பிளாஸ்மாவை பயன்படுத்தி கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்து வந்தன

விஷ்ணு விஷாலின் அடுத்த பட டைட்டில் வீடியோ ரிலீஸ்

கோலிவுட் திரையுலகின் இளம் ஹீரோக்களில் ஒருவராகிய விஷ்ணுவிஷால், தன்னுடைய அடுத்த படத்தின் படப்பிடிப்பை இன்று தொடங்குவதாக இருந்தார்

ஊரடங்கு உத்தரவு குறித்து பிரதமர் எடுத்த முடிவு என்ன? அரவிந்த் கெஜ்ரிவால் தகவல்

இன்று காலை 11 மணிக்கு தமிழக முதல்வர் உள்பட அனைத்து மாநில முதல்வர்களுடன் காணொளி மூலம் ஆலோசனை செய்த பிரதமர் மோடி, ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது

கொரோனா பரிசோதனையில் தொடரும் குழப்பங்கள்!!! இந்தியாவின் நிலைமை என்ன!!!

கொரோனா நோய்த்தொற்று மற்ற பாக்டீரியா, வைரஸ் கிருமிகள் போன்று இருப்பதில்லை. இதற்காகச் செய்யப்படும் பரிசோதனை முதற்கொண்டு இந்த வைரஸ் ஏற்படுத்தும் பாதிப்பு வரை அனைத்தும் வித்தியாசப்படுகின்றன