கேரளாவில் 3 வயது குழந்தைக்கு கொரோனா வைரஸ்..!
- IndiaGlitz, [Monday,March 09 2020]
கேரளாவில் 3 வயது குழந்தைக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.
வெனிஸ் நகரிலிருந்து கத்தாரின் தோஹா நகருக்கு கடந்த மாதம் 29-ம் தேதி சென்ற அவர்கள் அங்குள்ள விமான நிலையத்தில் சுமார் ஒன்றரை மணி நேரம் இருந்துள்ளனர். வெளிநாடு சென்று விட்டு கேரளா திரும்பியுள்ள அந்த குடும்பத்தினர் இத்தாலி சென்றதை அதிகாரிகளிடம் மறைத்துள்ளனர். இதனால் விமான நிலையத்தில் மருத்துவ பரிசோதனையை தவிர்த்துள்ளனர்.
கேரளா திரும்பிய அந்த குடும்பத்தினர் 5 பேருக்கு கொரோனா அறிகுறி இருந்ததால் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். நேற்று அந்த குடும்பத்தைச் சேர்ந்த 3 வயது குழந்தைக்கும் கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
விமான நிலையத்தில் மருத்துவ பரிசோதனைக்கு ஒத்துழைக்காமல் இருந்ததால் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே சீனாவிலிருந்து கொரோனா பாதிக்கப்பட்டு வந்த 3 பேர் குணப்படுத்தப்பட்டு வீடு திரும்பியுள்ளனர். குழந்தை உட்பட பாதிக்கபப்ட்டவர்களுக்கு தனிமையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் குடும்பத்தினர் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள் என கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே. ஷைலஜா தெரிவித்துள்ளார்.