உயிரையும் பொருட்படுத்தாது தண்ணீரில் தத்தளித்த இளைஞர்களை காப்பாற்றிய 3 பெண்கள்: குவியும் பாராட்டுக்கள்
Send us your feedback to audioarticles@vaarta.com
உயிர் மற்றும் மானத்தை பொருட்படுத்தாது தண்ணீரில் தத்தளித்த வாலிபர்களை மூன்று பெண்கள் காப்பாற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கொட்டறை என்ற நீர்த்தேக்கத்தில் சில இளைஞர்கள் நேற்று குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களில் நான்கு பேர் மட்டும் ஆழமான பகுதிக்குச் சென்று விட்டனர். அவர்களுக்கு நீச்சல் தெரியாததால் மீண்டும் கரையேற முடியாமல் தத்தளித்தனர். இதனை அடுத்து மற்ற வாலிபர்கள் சத்தம் போட்டதை அடுத்து அந்த பகுதியில் துணி துவைத்துக் கொண்டிருந்த செந்தமிழ், முத்தம்மாள், மற்றும் ஆனந்தவல்லி ஆகிய மூவர் சற்றும் யோசிக்காமல் தண்ணீரில் குதித்து நீந்திச் சென்று அந்த வாலிபரை காப்பாற்ற முயற்சித்தனர்.
4 வாலிபர்கள் தத்தளித்துக் கொண்டிருந்த நிலையில் தங்கள் உயிர் மற்றும் மானத்தையும் பொருட்படுத்தாமல் தாங்கள் அணிந்து இருந்த சேலையை அவிழ்த்து ஒன்றாக சேர்த்து முடிச்சுப் போட்டு நீரில் தத்தளித்த வாலிபர்களை நோக்கி அந்த பெண்கள் வீசினார்கள். அந்த சேலையை பிடித்து கொண்டு 2 வாலிபர்கள் கரை சேர்ந்து விட்டனர். ஆனால் இரண்டு வாலிபர்கள் தண்ணீரில் மூழ்கி விட்டதால் அவர்களை பெண்களால் காப்பாற்ற முடியவில்லை.
இது குறித்து தகவல் அறிந்த மீட்பு படையினர் உடனடியாக நீரில் மூழ்கியிருந்த 2 வாலிபர்களின் உடல்களை மீட்டனர். இந்த தகவல் அந்த பகுதி முழுவதும் பரவி 2 வாலிபர்களை காப்பாற்றிய பெண்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. தங்கள் உயிர் மற்றும் மானத்தையும் பொருட்படுத்தாமல் வாலிபர்களை காப்பாற்றிய பெண்களுக்கு சுதந்திர தின விழாவில் வீரதீர பதக்கம் அளிக்க வேண்டும் என்று அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments