கொரோனா தடுப்பூசிக்குப் பதிலாக நாய்க்கடி தடுப்பூசி… அதிர்ச்சி சம்பவம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
உத்திரப்பிரதேச மாநிலத்தின் ஷாம்லி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட 3 பெண்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கும்போது அவர்களிடம் இருந்த சான்றிதழை மருத்துவர்கள் சோதனை செய்துள்ளனர். அதில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கொரோனா தடுப்பூசிக்குப் பதிலாக நாய்க்கடிக்கான ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்ட விவகாரம் தெரியவந்துள்ளது.
இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண்களுக்குத் தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படும் நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தம்பட்ட அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்துள்ளதாகவும் மேலும் இதுகுறித்த விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்தியாவில் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைத்து நபர்களும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்ற நடைமுறையை மத்திய அரசு கொண்டுவந்துள்ள நிலையில் பெரும்பாலானவர்கள் தொடர்ந்து கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டு வருகின்றனர். ஆனால் சில நேரங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட நபர்களுக்கே கொரோனா பாதிப்பு ஏற்படுவது மக்கள் மத்தியில் தற்போது சிறிது கலக்கத்தை ஏற்படுத்தி இருப்பதாகவும் விமர்சிக்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout