சென்னையில் பறிமுதல் செய்யப்பட்ட 3 ஆயிரம் போதை மாத்திரைகள்… பரபரப்பு சம்பவம்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
சென்னை விமான நிலையத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டதாகப் பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது. சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்திற்கு இந்த மாத்திரைகள் கூரியரில் அனுப்பப் பட்டபோது சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்ததாகத் தகவல் தெரிவித்து உள்ளனர்.
கொரோனா சிகிச்சையில் தலைவலி, காயச்சல் போன்ற நோய்களுக்கு இந்த மாத்திரைகளை அனுப்புவது போன்று கூரியரில் பேக்கேஜ் செய்து அனுப்பப் பட்டதாகவும் கூறப்படுகிறது. இதுத்தொடர்பாக 30 வயது இளைஞர் ஒருவரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இச்சம்பவத்தில் முதல் குற்றவாளியான மருந்து விற்பனையாளர் மற்றும் அதிகாரிகள் குறித்து தேடுதல் வேட்டையைத் தொடங்கி இருப்பதாகவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்து உள்ளனர்.
சென்னை விமான நிலையத்தில் சோதனையில் ஈடுபட்ட சுங்கத்துறை அதிகாரிகள் புளோரிடா மாகாண முகவரிக்கு ஸ்டிக்கர் ஒட்டி பார்சல் அனப்பிய பேக்கேஜில் மெத்தில்பெனிடெட், சோல்பிடெம் மற்றும் குளோனாசெபம் போன்ற போதை மாத்திரைகள் இருந்ததை கண்டுபிடித்து உள்ளனர். அதில் 3 ஆயிரத்து 440 மாத்திரைகள் இருந்ததாகவும் அவற்றின் மொத்த மதிப்பு ரூ. 5 லட்சம் எனவும் கூறப்படுகிறது.
இதனால் கொரோனா சிகிச்சை தொடர்பாக வெளிநாடுகளுக்கு மருந்து, மாத்திரைகள் அனுப்புவது போன்று இப்படி முறைகேடான சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. தற்போது வெளிநாடுகளுக்கு கடத்த இருந்த போதை மாத்திரைகள் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து தொடர்புடைய நபர்களைத் தேடும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments