தமிழக நிதிநிலை அறிக்கை.....! பெட்ரோல் மீதான வரி குறைப்பு...!

  • IndiaGlitz, [Friday,August 13 2021]

பெட்ரோல் மீதான வரி ரூ.3 ரூபாய் குறைக்கப்படும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

சட்டமன்ற தேர்தலில், திமுக அரசு ஆட்சியமைத்தால் பெட்ரோல், டீசல் மீதான வரி குறைக்கப்படும் என்று அக்கட்சி வாக்குறுதி பட்டியலில் கூறியிருந்தது. இதன்பின் சென்ற மே மாதம் முதல் பெட்ரோல், டீசல் விலையானது தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், திடீரென 100 ரூபாயையும் தாண்டி தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று தமிழக அரசின் திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கையை, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இதில் பல்வேறு அறிக்கைகள் குறித்து பேசிய அவர், பெட்ரோல் மீதான மாநில அரசு வரியிலிருந்து 3 ரூபாய் குறைக்கப்படும் என்று வாசித்தார். இதனால் தமிழக அரசிற்கு ரூ.1,160 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்றும் தெரிவித்தார். தமிழகத்தில் பெட்ரோல் வரி குறைப்பு என்பது, நடுத்தர மக்களுக்கு நிவாரணமாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்முலம் பெட்ரோல் விலை இனி குறையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.