செவ்வாய் கிரகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 3 பெரிய ஏரிகள்!!! இதனால் அங்கு உயிரினம் வாழமுடியுமா???
Send us your feedback to audioarticles@vaarta.com
செவ்வாய் கிரகத்தில் உயிர்வாழ்வதற்கு ஏற்ற சூழல் இருக்கிறதா என்பதைக் குறித்து விஞ்ஞானிகள் தீவிரமாக ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். இத்தகைய ஆய்வுகளுக்காக பல நாடுகள் செவ்வாய் கிரகத்திற்கு சொந்தமாக செயற்கைக் கோள்களை அனுப்பவும் செய்திருக்கிறது. அப்படி அனுப்பப்பட்ட ஒரு செயற்கைக்கோள் கடந்த 2003 ஆம் ஆண்டு செவ்வாய் கிரகத்தில் ஏரி ஒன்று இருப்பதை உறுதி செய்தது.
ஐரோப்பா விண்வெளி மையத்திற்கு சொந்தமான மார்க் எக்ஸ் எனும் விண்கலம் கடந்த 2003 ஆம் ஆண்டு செவ்வாய் கிரகத்தில் 20 கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட ஏரி இருப்பதை உறுதி செய்தது. செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்புகள் மெல்லிய வளி மண்டலத்தால் சூழப்பட்டது. இதனால் மேற்பரப்பில் தண்ணீர் இருப்பதற்கான சாத்தியம் குறைவு என விஞ்ஞானிகள் இதுவரை நம்பி வந்தனர். இந்நிலையில் மார்க் எக்ஸ் சேகரித்த தரவுகளை அடிப்படையாக வைத்து அதன் அடிப்பரப்பில் திரவங்கள் இருப்பதற்கு சாத்திய இருக்கிறது என்பதை தற்போது விஞ்ஞானிகள் தெளிவுப்படுத்தினர்.
செவ்வாய் கிரகத்தில் நீர் இருப்பது உறுதியான நிலையில் அங்கு உயிரினங்கள் வாழ முடியுமா என்பதைக் குறித்து அடுத்ததாக தீவிர ஆய்வு மேற்கொள்ளப் பட்டது. இப்படி நடந்த ஆய்வுகளில் தற்போது 2010-2019 களுக்கு இடையில் 134 ரேடார் குறியீடுகளை மார்ஸ் எக்ஸ் சேகரித்து உள்ளது. இப்படி சேகரிப்பட்ட தரவுகளை அடிப்படையாகக் கொண்டு தற்போது மேலும் செவ்வாய் கிரகத்தில் 3 ஏரிகள் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
ஆனால் தற்போது கண்டுபிடிக்கப்பட்ட அனைத்து ஏரிகளும் அதிக உப்புத்தன்மை வாய்ந்தவை என்பதை விஞ்ஞானிகள் தெளிவுப்படுத்தி உள்ளனர். இதற்கு ஏரிகளிலுள்ள பனி உருவகுவதற்கு தேவையான வெப்பம் கிடைக்காததால் அங்கு காணப்படும் நீர் உப்புகளின் அதிக செறிவுகளைக் கொண்டிருக்க வேண்டும் என்றும் அவர்கள் சந்தேகத்தை எழுப்பியுள்ளனர். செவ்வாய் கிரகத்தின் தென்துருவப் பகுதிகளில் நடந்து வரும் இந்த ஆய்வுகள் விண்வெளி ஆராய்ச்சியில் அடுத்தக் கட்டத்தை நோக்கி நகர்த்தும் எனவும் நம்பப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments