3 மாதத்தில் பெய்யவேண்டிய மழை 20 நிமிடத்தில் கொட்டித்தீர்த்தக் கொடூரம்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
பருவமழை காலத்தில் இந்தியா உட்பட பல நாடுகளில் பல லட்சக்கணக்கான மக்கள் வாழ்க்கையை இழப்பதும், சில ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்படுவதும் சகஜமாக இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த செவ்வாய் கிழமை ஸ்பெயின் நாட்டின் சில மாகாணங்களில் பெய்த கனமழையால் தற்போது ஒட்டுமொத்த நாடுமே நிலைகுலைந்து போயிருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. அதிலும் செவில் என்ற மாகாணத்தில் 3 மாதங்கள் பெய்யவேண்டிய மழை வெறுமனே 20 நிமிடத்தில் கொட்டித்தீர்த்த கொடூரம் நடந்திருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டு இருக்கின்றன.
செவில் மாகாணத்தில் உள்ள ஏமொட் வானிலை நிறுவனம் கடந்த செவ்வாய் கிழமை அன்று செவில் உள்ளிட்ட சில பகுதிகளுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கையை விடுத்து இருந்ததாகக் கூறப்படுகிறது. அந்த எச்சரிக்கை மாலை 4 மணியளவில் ஆரஞ்சு வண்ணமாக மாறியதாகவும் அதற்குப்பின் சில நொடிகளில் பெய்த கனமழையால் சாலையில் வெள்ளம் ஏற்பட்டு கரைபுரண்டு ஓடியதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. வெள்ளத்தில் வீடுகள், கார் என சாலையில் நிறுத்தப்பட்டு இருந்த அனைத்து வாகனங்களும் அடித்துச் செல்லப்பட்ட காட்சி பார்ப்போரை பதைபதைக்க வைத்திருக்கிறது.
3 மாதங்களில் பெய்ய வேண்டிய மழை, செவில் பகுதியில் வெறுமனே 20 நிமிடங்களில் கொட்டித் தீர்த்ததாகக் கூறப்படுகிறது. எஸ்டெபா என்ற பகுதியல் இடி மற்றும் மின்னலுடன் ஆலங்கட்டி மழை பெய்ததால் பல வீடுகள் சேதம் அடைந்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. தற்போது அங்கிருந்தோரை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவிட்டு மீட்பு பணிகள் தொடங்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டின் மழைக்காலத்திலும் இந்தியாவில் மகாராஷ்டிரா, பீகார், அசாம் போன்ற மாநிலங்களில் கனமழை பெய்து பெரும் சேதத்தை ஏற்படுத்தும் அபாயம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த ஆண்டின் ஜுன் மாதத்தில் இருந்து பெய்த கனமழையால் வட இந்திய மாநிலங்களில் 134 பேர் உயிரிழந்ததாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவை ஒட்டியுள்ள நேபாளத்தில் தற்போது கனமழை பெய்துவருவதால் உயிரிழ்ப்புகள் அதிகரித்து இருப்பதாகக் கூறப்படுகிறது. கடந்த மே மாதம் முதற்கொண்டு நேபாளத்தில் பெய்துவரும் கனமழையால் இதுவரை 198 பேர் உயிரிழந்து விட்டதாகவும் கடுமையான சேதங்கள் ஏற்பட்டு இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. அதைப்போல தென் கொரியாவில் பெய்துவரும் கனமழையால் இதுவரை 30 க்கும் மேற்பட்டோர் இறந்து விட்டதாகவும் செய்திகள் கூறுகின்றன.
And not so far away in Ciudad Real ????#Hailstones the size of billiard balls.pic.twitter.com/IR2zFJf5WX
— Scott From Scotland (@ScottDuncanWX) August 11, 2020
⚡????FLASH - Fortes précipitations signalées à #Estepa dans la province de Séville en Espagne. (témoins) https://t.co/kKogybdDm2
— Brèves de presse (@Brevesdepresse) August 11, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments