நடமாடும் 'அம்மா உணவகம்': தமிழக முதல்வரின் அசத்தல் திட்டம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களால் தொடங்கப்பட்ட அம்மா உணவகங்கள் சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில் தற்போது அடுத்தகட்டமாக நடமாடும் அம்மா உணவகங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது
சென்னையில் ஏற்கனவே 200 வார்டுகளில் 407 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன என்பதும் ஏழை, எளிய மக்கள் இந்த உணவகங்கள் மூலம் குறைந்த விலையில் சாப்பிட்டு வருகின்றனர் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது இந்த திட்டம் மேலும் விரிவுபடுத்தப்பட்டு நடமாடும் அம்மா உணவகங்களாக செயல்படுகிறது
முதல்கட்டமாக 27 லட்சம் ரூபாய் மதிப்பில் மூன்று நடமாடும் அம்மா உணவக வாகனங்கள் இன்று சென்னையில் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தொடங்கி வைத்து உணவு வழங்கினார். வடசென்னை, மத்திய சென்னை, தென் சென்னை என மூன்று மண்டலங்களில் இந்த நடமாடும் அம்மா உணவகங்கள் இயங்கும் என்பதும், அம்மா உணவகத்தில் வழங்கப்பட்டு வரும் உணவு வகைகள் இந்த நடமாடும் அம்மா உணவகத்தில் அதே விலையில் கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது
இதுகுறித்து முதல்வரின் டுவிட்டர் பக்கத்தில், ‘தனியொரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்" என்ற பாரதியின் கூற்றுக்கிணங்க, எளிய மக்களின் பசியை போக்க, மாண்புமிகு அம்மா அவர்களால் துவங்கப்பட்ட அம்மா உணவகத்தின் சேவை நீட்டிப்பாக சென்னையில் இன்று, "3 நடமாடும் அம்மா உணவகங்கள்" துவக்கி வைத்ததில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். என்று கூறப்பட்டுள்ளது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments