ஜுன் மாதத்தில் பூமியை நோக்கி அடுத்தடுத்து வரப்போகும் 3 விண்கற்கள்!!! 2020 இதோடு முடியாது போல...
- IndiaGlitz, [Thursday,June 04 2020]
2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே இந்தியாவிற்கு அடுக்கடுக்காக பல பேரழிவுகள் வந்து கொண்டே இருக்கின்றன. கொரோனா நோய்த்தொற்று, ஆம்பன் புயல், நிசர்கா சூறாவளி காற்று, வெட்டுக்கிளி படையெடுப்பு தற்போது இன்னொரு பேராபத்தும் பூமியை நோக்கி வர்ப்போவதாக நாசா விண்வெளி ஆய்வு மையம் தகவல் வெளியிட்டு இருக்கிறது. இதுவரை பூமியை நோக்கி வரும் விண்கல் என்ற செய்தியைத்தான் நாம் பார்த்திருக்கிறோம். தற்போது அடுக்கடுக்காக 3 விண்கற்கள் பூமியை நோக்கி வரவிருக்கிறது. அப்படி பூமியை நோக்கி வரும் விண்கற்கள் பூமிக்கு மிக அருகில் பயணிக்க இருக்கிறது என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகி இருக்கிறது.
ASTEROID 2002 NN4 – என்ற விண்கல் ஜுன் 6 ஆத் தேதி (UTC) நேரப்படி சரியாக அதிகாலை 3.20 க்கு தொடங்கி பூமிக்கு அருகில் வரவிருக்கிறது. பூமிக்கு அருகில் சுமார் 5.09 கிலோ மீட்டர் இது பயணிக்கும் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது. இதன் அளவு சுமார் 4 கால்பந்து மைதானத்தைப் போன்று இருக்கும் எனவும் டையா மீட்டரில் 570 ஆக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. இதன் பயண வேகத்தைப் பார்த்தால் தான் தலையே சுற்றுகிறது. இந்த விண்கல் சுமார் 40,140 கிலோ மீட்டர் வேகத்தில் பயணித்து பூமியை நோக்கி வரவிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ASTEROID 2013 XA22 என்ற அடுத்த விண்கல் ஜுன் 8 ஆம் தேதி மதியம் 3.40 மணிக்கு பூமிக்கு மிகவும் நெருக்கமாக அதாவது 2.98 கிலோ மீட்டர் தூரத்தில் பயணிக்க இருக்கிறது. ஆனால் இந்த விண்கல்லின் அளவு கொஞ்சம் சிறியது என்பது மட்டும் ஒரு சிறிய திருப்தி. இதன் அளவு 160 டையா மீட்டர் எனவும் பூமியை நோக்கி வரும் இதன் வேகம் 24 ஆயிரத்து 650 கிலோ மீட்டராக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
ASTEROID 2010 NY65 இந்த விண்கல் 10 வருடங்களுக்கு முன்பு கண்டுபிடிக்கப் பட்டது. வருகிற ஜுன் 24 ஆம் தேதி காலை 6.44 மணிக்கு பூமியின் 3.76 கிலோ மீட்டர் தூரத்தில் இந்த விண்கல் வரவிருக்கிறது. இதன் அளவு முதலில் கூறிய இரண்டு விண்கல்லிற்கும் இடைப்பட்டது எனவும் இதன் அமைப்பு சிகரம் போன்று இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த விண்கல்லில் உள்ள சிகரத்தின் அளவு 310 மீட்டராக இருக்கும் எனவும் கணிக்கப் பட்டுள்ளது. மேலும் இந்த விண்கல் 46 ஆயிரத்து 400 கிலோ மீட்டர் தொலைவில் பயணித்து பூமியை நோக்கி வரும் எனவும் எதிர்ப்பார்க்கப் படுகிறது. இதற்கு முன்பு வரை பூமியை நோக்கி ஒரே நேரத்தில் 3 விண்கற்கள் வந்ததில்லை எனவும் இதுவே முதல் முறை எனவும் நாசா தெரிவித்து இருக்கிறது.