மது அருந்திய கல்லூரி மாணவிகள்: வீடியோ வைரலானதால் தற்கொலை முயற்சி!
Send us your feedback to audioarticles@vaarta.com
மயிலாடுதுறையில் தனியார் கல்லூரி மாணவிகள் நால்வர் சீருடை அணிந்தபடி மது அருந்திய வீடியோ வைரல் ஆனதை அடுத்து அந்த மாணவிகளில் ஒருவர் தற்கொலைக்கு முயற்சி செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
மயிலாடுதுறை அருகே தருமபுரம் என்ற பகுதியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் படித்து கொண்டிருக்கும் 4 மாணவிகள் மற்றும் ஒரு மாணவர் ஆகிய ஐவரும் மது அருந்தும் காட்சியின் வீடியோ வைரல் ஆனது.
இதனை அடுத்து இளைஞர் ஒருவருடன் சேர்ந்து 3 மாணவிகள் மது அருந்தும் காட்சிகள் வைரல் ஆனது. இதனையடுத்து கல்லூரி நிர்வாகம் மூன்று மாணவிகளையும் ஒரு மாணவரையும் கல்லூரியில் இருந்து டிஸ்மிஸ் செய்தது. வீடியோ வைரல் ஆனதால் ஏற்பட்ட அவமானம் மற்றும் கல்லூரி நிர்வாகம் எடுத்த டிஸ்மிஸ் நடவடிக்கை ஆகியவைகளால் அவமானம் அடைந்த மாணவிகளில் ஒருவர் தற்கொலைக்கு முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மயிலாடுதுறை அருகே சீருடை அணிந்து மது அருந்திய 4 மாணவிகளைப் பள்ளி நிர்வாகம் நீக்கியுள்ளது.#SunNews #SunNewsSocial #Mayiladuthurai#SchoolGirl #AlcoholDrink pic.twitter.com/wjFbq3c7m7
— Sun News (@sunnewstamil) December 28, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments