விமானத்தின் டயரைப் பிடித்துத் தொங்கிய 3 பேர்… அலற வைக்கும் ஆப்கன் வீடியோ!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஆப்கானிஸ்தான் நாட்டிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை தாலிபான்கள் தற்போது மூடியுள்ளனர். ஏற்கனவே தாலிபான்கள் மீதுள்ள பீதி காரணமாக சொந்த நாட்டு மக்களும் தற்போது நாட்டைவிட்டு செல்வதற்கு முயற்சி செய்து வருகின்றனர். இதனால் தலைநகர் காபூலில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் கூட்டம் அலைமோதுகிறது.
இந்நிலையில் காபூலில் இருந்து கிளம்பிய பெரிய விமானத்தின் டயரைப் பிடித்து 3 பேர் தொங்கிக் கொண்டே பயணித்த நிலையில் அவர்கள் சில நிமிடங்களில் கீழே விழுந்து உயிரிழந்த வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
காபூல் விமான நிலையத்தில் இன்று காலை முதலே கூட்டம் அலைமோதுகிறது. இதனால் கூட்டத்தைக் கட்டுப்படுத்த தாலிபான்கள் பொதுமக்களின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் இதில் 5 பேர் உயரிழந்ததாகவும் தகவல் வெளியாகியது. இதையடுத்து மீண்டும் பொதுமக்கள் இராணுவ விமானங்களை மறித்துக் கொண்டு தப்பித்துச் செல்லும் புகைப்படங்கள் வெளியாகி பார்ப்போரை கண்ணீர் சிந்த வைக்கிறது.
தாலிபான்களின் கட்டுப்பாட்டில் இருக்க விரும்பாமல் மக்கள் சொந்த ஊர், உடைமைகளை விட்டுவிட்டு தப்பித்துச் செல்ல முயற்சித்து வருகின்றனர். இந்நிலையில் சர்வதேச விமான நிலையமும் மூடப்பட்டு இருக்கிறது. இதனால் அங்கிருக்கும் வெளிநாட்டினரும் சொந்த ஊருக்குத் திரும்ப முடியாத நிலைமை ஏற்பட்டு இருக்கிறது. இந்நிலையில் பயணிகள் சிலர் விமானத்தின் டயரைப் பிடித்து தொங்கி உயிரிழந்த சம்பவம் சர்வதேச அளவில் கடும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
Exclusive - The video shows a flight from #Kabul airport where two people are thrown from a plane into the the people's homes.#Afghanistan #Taliban pic.twitter.com/GlSgjNApJj
— Aśvaka - آسواکا News Agency (@AsvakaNews) August 16, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout