கொரோனாவால் கடனில் தத்தளித்த இளைஞர்கள் திடீரென கோடீஸ்வரர்களாக மாறிய ஆச்சரியம்
- IndiaGlitz, [Wednesday,April 08 2020]
துபாயில் பணிபுரிந்த மூன்று கேரள இளைஞர்கள் கொரோனா காரணமாக தொழிலில் நஷ்டம் ஆகி மீண்டும் கேரளா திரும்பலாம் என நினைத்த போது திடீரென அவர்கள் கோடீஸ்வரராக மாறிய சம்பவம் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.
கேரளாவை சேர்ந்த ஜிஜேஷ், ஷாஜகான் மற்றும் ஷானோஜ் பாலகிருஷ்ணன் ஆகிய மூவரும் துபாயில் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார்கள். இவர்கள் மூவரும் தவணை முறையில் சொகுசு காரை வாங்கி சுற்றுலாப் பயணிகளுக்கு வாடகைக்கு கார் ஓட்டி சம்பாதித்து வந்தனர்.
இந்த நிலையில் திடீரென கொரோனா பிரச்சனை ஏற்பட்டதால் சுற்றுலாவுக்கு வருபவர்களின் எண்ணிக்கை சுத்தமாக நின்றுவிட்டது. இதனால் காருக்காக வாங்கிய கடன் தவணை கட்ட முடியாமல் திண்டாடினர். இதனையடுத்து காரை விற்றுவிட்டு தவணையை செலுத்தி விட்டு நாடு திரும்பலாம் என முடிவு செய்தனர்.
இந்த நேரத்தில் திடீரென ஒரு போன் கால் வந்து அவர்களுடைய வாழ்க்கையையே தலைகீழாக மாற்றிவிட்டது. அந்த போன் காலில் மூவரும் சேர்ந்து வாங்கிய லாட்டரி சீட்டுக்கு ரூபாய் 41 கோடி ரூபாய் பரிசு விழுந்த தகவல் அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து மகிழ்ச்சி அடைந்த மூவரும் தற்போது மீண்டும் தங்கள் தொழிலை தொடர முடிவு செய்துள்ளனர்.
காருக்கு வாங்கிய கடனை செலுத்த முடியாமல் தத்தளித்து நின்ற மூன்று இளைஞர்கள் தற்போது கோடீஸ்வரராக மாறிய சம்பவம் அந்த பகுதியில் உள்ளவர்களை பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.