ஏடிஎம்-இல் பணம் எடுத்த 3 ராணுவ வீரர்களுக்கு கொரோனா பாசிட்டிவ்!

குஜராத் மாநிலத்தில் உள்ள பரோடா என்ற பகுதியில் உள்ள ஒரு ஏடிஎம்-இல் நேற்று ராணுவ வீரர்கள் மூவர் பணம் எடுத்துள்ள நிலையில் அவர்கள் மூவருக்கும் கொரோனா தொற்று பரவி இருப்பது இன்று கண்டறியப்பட்டது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

3 ராணுவ வீரர்களுக்கும் கொரோனா தொற்று எப்படி பரவியது என்பது குறித்த விசாரணையில் மூவரும் பரோடாவில் உள்ள ஒரே ஏடிஎம் மையத்தில் பணம் எடுத்தது தெரிய வந்தது. இதனையடுத்து இந்த மூவருடன் தொடர்பில் இருந்து 28 நபர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. மேலும் 3 ராணுவ வீரர்கள் பணம் எடுத்த ஏடிஎம் மையம் மூடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே ரூபாய் நோட்டுக்கள் மூலம் கொரோனா வைரஸ் பரவுமா? பரவாதா? என்ற விவாதம் நடந்து கொண்டிருக்கும் நிலையில் ஏடிஎம்-இல் பணம் எடுத்ததால் கொரோனா வைரஸ் பரவியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே ஏடிஎம்-இல் பணம் எடுக்க செல்பவர்களும் இனி கவனமாக இருக்க வேண்டும் என்பது இந்த சம்பவத்தில் இருந்து தெரிய வருகிறது.

More News

வீட்டை தாண்டி நீயும் வரக்கூடாது, நானும் வரமாட்டேன்: வைரலாகும் வடிவேலு வீடியோ

கோலிவுட் திரையுலகை சேர்ந்த பல நடிகர் நடிகைகள் கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர் என்பதை நாம் அவ்வப்போது பார்த்து வருகிறோம்.

கொரோனாவுக்கு 4 முக்கிய தடுப்பூசிகள்: எப்படி தயாரிக்கப்படுகிறது தெரியுமா???

தற்போதைய நிலைமைக்கு உலக மக்களின் ஒரே எதிர்ப்பார்ப்பாக இருப்பது கொரோனா தடுப்பு மருந்து மட்டுமே.

செல்பி எடுத்து விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்: தொண்டர்களுக்கு விஜயகாந்த் வேண்டுகோள்

தமிழக மக்களும், மற்றும் தேமுதிகவினர் அனைவரும், அவரவர்கள் முகத்தில் மாஸ்க் அணிந்து மொபைல் போனில் செல்பி படம் எடுத்து அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டு முககவசத்தின்

ராகவா லாரன்ஸூக்கு சைகை மொழியில் நன்றி கூறிய மாற்றுத்திறனாளி பெண்

தென்னிந்திய திரையுலகில் மிக அதிகமாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி உதவி செய்தவர் நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் என்பது தெரிந்ததே

ஜோதிகா பேசியதை அரைகுறையாக புரிந்து கொண்ட அன்பர்கள்: பிரபல தயாரிப்பாளர்

சமீபத்தில் நடந்த சினிமா விழா ஒன்றில் கலந்து கொண்ட நடிகை ஜோதிகா, தஞ்சை பெரிய கோவில் குறித்து சர்ச்சைக்குரிய ஒரு கருத்து கூறியதாக இணையதளங்களில் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.