சென்னை மாலில் ரஜினியின் '2.0 படப்பிடிப்பு

  • IndiaGlitz, [Wednesday,May 18 2016]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் '2.0' படத்தின் டெல்லி படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து. தற்போது சென்னை அருகேயுள்ள தனியார் தீம் பார்க் ஒன்றில் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வந்தது என்பதை பார்த்தோம்.


இந்நிலையில் சென்னை வடபழநி ஃபோரம் விஜயா மாலில் இன்று அதிகாலை இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த படப்பிடிப்பில் ரஜினிகாந்த் கலந்து கொள்ளவில்லை எனினும் இந்த படத்தின் வில்லன் நடிகரான அக்சயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பொதுமக்கள் நடமாட்டம் இல்லாத அதிகாலை 2 மணி முதல் 6 மணி வரை இந்த படப்பிடிப்பு தகுந்த அனுமதியுடன் நடந்துள்ளதாக தெரிகிறது. லைகா புரடொக்ஷன்ஸ் பிரமாண்டமாக தயாரித்து வரும் இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

விஷாலின் 'மருது' படத்தின் ரன்னிங் டைம் குறித்த தகவல்

விஷால், ஸ்ரீதிவ்யா, சூரி, ராதாரவி உள்ளிட்ட பலர் நடிப்பில் 'குட்டிப்புலி', 'கொம்பன்' படங்களை இயக்கிய முத்தையா இயக்கியுள்ள 'மருது'...

சந்தானம் நடிக்கும் 'தில்லுக்கு துட்டு' டீசர் ரிலீஸ் தேதி

'இனிமே இப்படித்தான்' பட வெற்றிக்கு பின்னர் முழுநேர ஹீரோவாக மாறிவிட்ட நடிகர் சந்தானம், ஹீரோவாக நடித்துள்ள அடுத்த படம் 'தில்லுக்கு துட்டு'. இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் டீசர் ரிலீஸ் தேதி குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளது.

விஷாலின் 'மருது' படத்தின் ரன்னிங் டைம் குறித்த தகவல்

விஷால், ஸ்ரீதிவ்யா, சூரி, ராதாரவி உள்ளிட்ட பலர் நடிப்பில் 'குட்டிப்புலி', 'கொம்பன்' படங்களை இயக்கிய முத்தையா இயக்கியுள்ள 'மருது' திரைப்படம் நாளை மறுநாள் தமிழகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ளது...

காஜல் அகர்வாலின் முதல் உதட்டு முத்தத்தில் ஒளிந்துள்ள ரகசியம்

கோலிவுட், டோலிவுட் ஆகிய திரையுலகின் முன்னணி நடிகையான காஜல் அகர்வால் இதுவரை முத்தக்காட்சியில் குறிப்பாக லிப்கிஸ் காட்சியில் நடித்ததில்லை...

ரஜினியை கடத்த திட்டமா?

பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா, தனது சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி பாராட்டும் கண்டனங்களையும் பெற்று வருவது வாடிக்கையே...