சென்னை மாலில் ரஜினியின் '2.0 படப்பிடிப்பு

  • IndiaGlitz, [Wednesday,May 18 2016]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் '2.0' படத்தின் டெல்லி படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து. தற்போது சென்னை அருகேயுள்ள தனியார் தீம் பார்க் ஒன்றில் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வந்தது என்பதை பார்த்தோம்.


இந்நிலையில் சென்னை வடபழநி ஃபோரம் விஜயா மாலில் இன்று அதிகாலை இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த படப்பிடிப்பில் ரஜினிகாந்த் கலந்து கொள்ளவில்லை எனினும் இந்த படத்தின் வில்லன் நடிகரான அக்சயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பொதுமக்கள் நடமாட்டம் இல்லாத அதிகாலை 2 மணி முதல் 6 மணி வரை இந்த படப்பிடிப்பு தகுந்த அனுமதியுடன் நடந்துள்ளதாக தெரிகிறது. லைகா புரடொக்ஷன்ஸ் பிரமாண்டமாக தயாரித்து வரும் இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.