போட்டியில் ரிஷப் பண்ட் ஏமாற்றினாரா? ஜோகனஸ்பர்க்கில் சர்ச்சை!
Send us your feedback to audioarticles@vaarta.com
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை வகித்துவருகிறது. இந்நிலையில் ஜோகனஸ்பர்க்கில் நேற்று 2 ஆவது டெஸ்ட்போட்டி துவங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கே.எல்.ராகுல் பேட்டிங்கை தேர்வு செய்தார். ஆனால் தென்னாப்பிரிக்க பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாத இந்திய வீரர்கள் வெறும் 202 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தனர்.
இந்நிலையில் கே.எல்.ராகுல் மட்டும் அதிர்ஷ்டவசமாக 50 ரன்களை விளாசியிருந்தார். அதேபோல ரவிச்சந்திரன் அஸ்வின் 45 ரன்களை எடுத்திருந்தார். இதைத்தொடர்ந்து முதல் இன்னிங்ஸை விளையாடிய தென்னாப்பிரிக்கா முதல்நாள் ஆட்டத்தில் 1 விக்கெட் இழப்பிற்கு 35 ரன்களை எடுத்திருந்தனர். தொடர்ந்து இரண்டாவது நாளான இன்று தென்னாப்பிரிக்க கேப்டன் டீன் எல்கார் மற்றும் பீட்டர்சன் இருவரும் கூட்டணி போட்டு விளையாடியதில் தற்போது அந்த அணியின் ரன் ரேட் கணிசமாக உயர்ந்திருக்கிறது.
இதனால் 2 ஆவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா வீரர்கள் ஆதிக்கம் செலுத்திவருகின்றனர். இந்நிலையில் ஷர்துல் தாகூர் 3 விக்கெட்டுகளை வீழ்த்த தொடர்ந்து அந்த அணியின் மற்றொரு வீரரான வெண்டர் டுசன் விக்கட் கீப்பர் கையில் பட்டு அவுட்டானார். இதனால் ரிவியூ கேட்காமலே வெண்டர் டுசனும் பெவிலியனை நோக்கி நடையைக் கட்டினார். கூடவே வீரர்களுக்கு உணவு இடைவேளையும் அறிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து வெண்டர் டுசனின் விக்கெட்டை ரீப்ளே செய்துபார்த்த நடுவர்களுக்கு கடும் அதிர்ச்சி ஏற்பட்டு இருக்கிறது. காரணம் ரிஷப் பண்ட் டுசனின் விக்கெட்டை பிடிக்காமலேயே நடுவரிடம் அவுட் என கேட்டிருக்கிறார். அதற்கு நடுவரும் விக்கெட் கொடுத்திருக்கிறார். இதனால் அதிர்த்துபோன தென்னாப்பிரிக்க அணி நிர்வாகம் புகார் ரிஷப் பண்ட் குறித்து புகார் அளித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆனால் இந்த விவகாரம் தொடர்பாக பேசிய மூத்த வீரர்கள் வெண்டர் டுசன் ரிவியூ கேட்டிருக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு பெவிலியனுக்குச் சென்ற பின்பு பேசுவதில் ஒரு நியாயமும் இல்லை எனத் தெரிவித்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout