கோலி கேப்டன்சி குறித்து முதன்முதலாக வாய்திறந்த டிராவிட்… என்ன சொன்னார் தெரியுமா?
- IndiaGlitz, [Monday,January 03 2022] Sports News
இந்திய கிரிக்கெட அணி தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் இருந்து வருகிறது. செஞ்சூரியனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 113 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிப்பெற்றதைத் தொடர்ந்து இன்று ஜோகன் ஸ்பர்க்கில் இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற இருக்கிறது. இந்நிலையில் பயிற்சியாளரார் ராகுல் டிராவிட் கேப்டன் கோலி குறித்து சில சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றிப்பெற்றவுடன் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி செய்தியாளர்களைச் சந்தித்துப்பேச வில்லை. இதனால் பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்ட வந்த நிலையில் இரண்டாவது போட்டி இன்று ஜோகன்ஸ்பர்க்கில் நடைபெறவுள்ளது. இதையடுத்து செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட், கோலி சிறந்த தலைவராக செயல்படுகிறார். அவர் அணியை உற்சாகமாக வைத்துக் கொள்கிறார். மேலும் அவருடன் இணைந்து பணியாற்றுவதில் எந்தச் சிக்கலும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
மேலும் கோலி மிகவும் கடுமையாக பயிற்சி எடுத்துக்கொள்கிறார். இதனால் விரைவில் ஃபார்மிற்கு திரும்புவார். மேலும் இவரைப் போலவே இரண்டு வீரர்கள் கடுமையாக பயிற்சி மேற்கொள்கின்றனர். அவர்களும் விரைவில் மீண்டும் வருவார்கள் என்று கூறியுள்ளார். இதனால் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மீண்டும் புஜாரா மற்றும் ரஹானேவிற்கு வாய்ப்பு வழங்கப்படும் ஸ்ரேயாஸ் ஐயர், அனுமன் விஹாரிக்கு இந்தப் போட்டியிலும் வாய்ப்பு கிடைக்காமல் போகலாம் என்று கிரிக்கெட் ரசிகர்கள் கணிப்புகளை வெளியிட்டு வருகின்றனர்.
மேலும் ஜோகன் ஸ்பர்க் களம் குறித்துபேசிய டிராவிட் இது வேகப்பந்து வீச்சாளர் மற்றும் பேட்ஸ்மேன் இருவருக்கு கைக்கொடுக்கும் சிறந்த ஆடுகளம். இந்தியா இதற்குமுன்பு இந்தக் களத்தில் சிறப்பாகச் செயல்பட்டுள்ளது என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மேலும் டெஸ்ட் அணியின் கேப்டன் விராட் கோலி கடந்த 2021 போட்டிகளில் ஒரு சதத்தைக் கூட அடிக்காமல் ஏமாற்றிவிட்டார். இந்நிலையில் இன்று நடைபெறவுள்ள போட்டியில் அவர் வெறும் 7 ரன்கள் மட்டும் அடித்துவிட்டால் சர்வதேச அளவில் வெளிநாடுகளில் அதிகம் ரன்களைக் குவித்த வீரர் என்ற சாதனையை முறியடித்துவிடுவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.