அணியில் இருந்து நீக்க வேண்டுமா? தக்கப்பதிலடி கொடுத்த ரஹானே, புஜாரா!
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களான சடீஸ்வர் புஜாரா, அஜிங்கியா ரஹானா இருவரும் கடந்த சில தொடர்களில் அதிக ரன்கள் எதுவும் எடுக்காமல் சொதப்பி வந்தனர். இதனால் கடுப்பான ரசிகர்கள் இருவரையும் நீக்கிவிட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கலாமே என விமர்சித்து இருந்தனர்.
இந்நிலையில் 2 ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடிவரும் ராஹானே, புஜாரா இருவரும் அரைச் சதம் அடித்து மீண்டும் தங்களது திறமையை நிரூபித்து இருக்கும் சம்பவம் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்துடன் பார்க்கப்படுகிறது.
இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களான ராஹானே, மற்றும் புஜாரா இருவரும் ஃபார்ம் அவுட் ஆகிவிட்டதாக கடும் விமர்சனத்தைச் சந்தித்து வந்த நிலையில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் மீண்டும் இதேபோல நடந்தால் இதுவே உங்களுக்குக் கடைசி போட்டியாக இருக்கும் என்று முன்னாள் கேப்டன் கவாஸ்கர் விமர்சனம் வெளியிட்டு இருந்தார்.
இதையடுத்து நேற்று 2 ஆவது டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய ராஹானா மற்றும் புஜாரா இருவரும் தொடர்ந்து நிதானமாகவும் அதேநேரத்தில் அதிரடி காட்டியும் விளையாடி வருகின்றனர். இதில் புஜாரா 86 பந்துகளைச் சந்தித்து 10 பவுண்டரிகளை விளாசி 53 ரன்களை அடித்துள்ளார். அதேபோல ரஹானே 8 பவுண்டரிகளை விளாசி 58 ரன்களை குவித்துள்ளார். இதனால் இருவரும் கம்பேக் கொடுத்திருப்பதாக முன்னணி வீரர்கள் பலரும் அவர்களுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் சல்மான் பட் அழுத்தமான சூழலில்தான் புஜாரா நிதானமாக விளையாடுகிறார். கடந்த ஆண்டு இங்கிலாந்திற்கு எதிரான ஒரு போட்டியில் பிளேயிங் லெவனில் இருக்கமாட்டாரோ? என விமர்சனம் எழுந்த போது 91 ரன்களைக் குவித்திருந்தார். தற்போது மீண்டும் அதே அழுத்தமான சூழலில் மிக நன்றாக விளையாடி வருகிறார் எனத் தெரிவித்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout