நயன்தாராவின் 'கொலையுதிர்க்காலம்' ரிலீஸ் குறித்த தகவல்

  • IndiaGlitz, [Friday,November 30 2018]

இந்த ஆண்டு லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த 'கோலமாவு கோகிலா மற்றும் 'இமைக்கா நொடிகள்' ஆகிய இரண்டு படங்கள் வெளிவந்து இரண்டும் நல்ல வெற்றியை பெற்றது. இந்த நிலையில் வரும் 2019ஆம் ஆண்டும் அவருக்கு வெற்றி ஆண்டாக இருக்கும் என கருதப்படுகிறது.

அஜித்துடன் நயன்தாரா நடித்த 'விஸ்வாசம்' திரைப்படம் வரும் ஜனவரி மாதம் பொங்கல் தினத்தில் வெளியாகவுள்ள நிலையில் அதே ஜனவரி மாதம் அவர் நடித்த இன்னொரு திரைப்படமான 'கொலையுதிர்க்காலம்' வெளியாகவுள்ளதாக சற்றுமுன் வெளியான இந்த படத்தின் செகண்ட் லுக்கில் அறிவிக்கப்பட்டுள்ளது. சரியான ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு சென்சாருக்கு பின் அறிவிக்கப்படும் என தெரிகிறது.

இளம் இசைஞானி யுவன்ஷங்கர் ராஜாவின் இசை மற்றும் தயாரிப்பில் உருவாகி வரும் 'கொலையுதிர்க்காலம்' திரைப்படத்தை சக்ரி டோலட்டி இயக்கியுள்ளார். இவர் கமல்ஹாசனின் 'உன்னை போல் ஒருவன்' படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

கோகோ, சிசிவி, 2.0: லைகா நிறுவனம் பெற்ற ஹாட்ரிக் வெற்றி

கடந்த 2014ஆம் ஆண்டு தளபதி விஜய் நடித்த 'கத்தி' படத்தின் மூலம் கோலிவுட் திரையுலகில் எண்ட்ரி ஆனது லைகா நிறுவனம். அந்த படம் வெளியாகும்போது லைகா நிறுவனத்திற்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்டது.

2.0 டிக்கெட்டுடன் விடுமுறை: ஊழியர்களை குஷிப்படுத்திய பிரபல நிறுவனம்

ரஜினிகாந்த் நடித்த '2.0' திரைப்படம் இன்று வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. அதிகாலை 4 மணி காட்சிக்கு நள்ளிரவு முதலே தியேட்டரில் குவிந்த ரசிகர்கள் படத்தை பார்த்து கொண்டாடி வருகின்றனர்

நாளை முதல் ஏ.ஆர்.ரஹ்மானின் அடுத்த மேஜிக் ஆரம்பம்

இன்று வெளியான ரஜினியின் '2.0' படத்தில் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான், ஒரு இசை மாயஜாலமே நடத்தி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ள நிலையில் நாளை முதல் அவருடைய இன்னொரு மாயஜாலம் ஆரம்பமாகவுள்ளது.

புயல் பாதித்த பகுதியிலேயே தங்கி நிவாரண உதவி செய்யும் சூரி

கடந்த சில நாட்களுக்கு முன் கஜா புயல் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களை சிதைத்து அவர்களுடைய வாழ்வாதாரங்களை நொறுக்கி தள்ளியது.

விக்ரமின் அடுத்த படம் குறித்த முக்கிய தகவல்

சீயான் விக்ரம் நடிப்பில் கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகி வரும் 'கடாரம் கொண்டான்' திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன் மலேசியாவில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது