2-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல்.. வேலூர் தனியார் பள்ளியில் நடந்த கொடூரம்..!

  • IndiaGlitz, [Thursday,February 27 2020]

வேலூர் பெரிய அல்லாபுரம் பகுதியைச் சேர்ந்த ஒரு தம்பதியின் 8 வயது மகள், வேலூர் அண்ணா சாலையில் உள்ள தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்துவருகிறாள். கடந்த 17-ம் தேதி மதியம், உணவு இடைவேளையின்போது பள்ளி வளாகத்தில் அந்த மாணவி விளையாடிக்கொண்டிருந்தாள்.

அப்போது, அங்கு வந்த மர்ம நபர் ஒருவர், 'மிக்சர்’ வாங்கித் தருவதாகக் கூறி மாணவியைப் பள்ளி கழிவறைக்கு அழைத்துச் சென்று சிறார் வதை செய்துள்ளான்.மாலையில் வீடு திரும்பிய மாணவியின் உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. பின்னர் வேலூர் சி.எம்.சி மருத்துவமனைக்குப் பெற்றோர் அழைத்துச் சென்றனர். மருத்துவ பரிசோதனையில், மாணவி பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டுள்ளது தெரியவந்தது.

அதிர்ச்சியடைந்த பெற்றோர், மறுநாள் காலை பள்ளிக்குச் சென்று முறையிட்டனர். ஆனால், 'பள்ளியின் பெயரை வெளியில் சொல்லக் கூடாது’ என்றுகூறி நிர்வாகம் தரப்பில் மிரட்டியதாக பெற்றோர் தரப்பினர் தெரிவிக்கின்றனர்.அதையடுத்து, வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் புகார் அளித்தனர். அடையாளம் தெரியாத அந்த நபர் மீது 'போக்ஸோ’ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீஸார், அந்த நபரைத் தீவிரமாகத் தேடிவருகிறார்கள்.

அதே சமயம், பள்ளிக் கழிவறையில் மாணவிக்கு நடந்த கொடூரத்துக்கு தலைமை ஆசிரியர் மற்றும் உதவித் தலைமை ஆசிரியர் மீதும் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

More News

இந்தியாவில் வெளியாகிறது சாம்சங் Galaxy M31..ரூ.15000 க்கு என்னென்ன specifications?!

இந்தியாவில் Samsung Galaxy M31-ன் 64 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனுக்கு ரூ.15,999 விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது, அதன் 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடல் ரூ.16,999 விலையுடன் வருகிறது.

டெல்லி வன்முறையை பற்றி ட்ரம்ப் ஏன் வாயே திறக்கவில்லை !? பெர்னி சாண்டர்ஸ்.

டெல்லி வன்முறைச் சம்பவம் குறித்து அமெரிக்க ஜனாதிபதிக்கான ஜனநாயகக் கட்சி வேட்பாளர் பெர்னி சாண்டர்ஸ் தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

டி-20 உலகக்கோப்பை.. அரையிறுதிக்குள் நுழைந்தது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி..!

ஐசிசி மகளிர்  டி20 உலகக் கோப்பையில் நியூசிலாந்தை சந்தித்த இந்திய அணி மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வென்று அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

"பாஜக பேரணி..பிரியாணி அண்டாக்களுக்கு பாதுகாப்பு கொடுங்கள்"..! திருப்பூர் காவல் நிலையத்தில் மனு.

பாஜக பேரணியின்போது பிரியாணி அண்டாவிற்கு பாதுகாப்பு வேண்டி திருப்பூர் காவநிலையத்தில் பிரியாணி கடை உரிமையாளர்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

"நான் சிக்கன் சாப்பிட்டேன் கொரோனா வந்துவிட்டது" வாட்சப்பில் வதந்தி பரப்பிய இளைஞர் கைது..!

சிக்கன் வாங்கி சாப்பிட்ட 17 வயது இளைஞர் ஒருவர், வாங்கிய சிக்கனுக்கு பணம் கொடுக்கமுடியாததால் தனது கடையை பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவதாகவும் புகாரில் தெரிவித்தார்.