2-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல்.. வேலூர் தனியார் பள்ளியில் நடந்த கொடூரம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
வேலூர் பெரிய அல்லாபுரம் பகுதியைச் சேர்ந்த ஒரு தம்பதியின் 8 வயது மகள், வேலூர் அண்ணா சாலையில் உள்ள தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்துவருகிறாள். கடந்த 17-ம் தேதி மதியம், உணவு இடைவேளையின்போது பள்ளி வளாகத்தில் அந்த மாணவி விளையாடிக்கொண்டிருந்தாள்.
அப்போது, அங்கு வந்த மர்ம நபர் ஒருவர், `மிக்சர்’ வாங்கித் தருவதாகக் கூறி மாணவியைப் பள்ளி கழிவறைக்கு அழைத்துச் சென்று சிறார் வதை செய்துள்ளான்.மாலையில் வீடு திரும்பிய மாணவியின் உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. பின்னர் வேலூர் சி.எம்.சி மருத்துவமனைக்குப் பெற்றோர் அழைத்துச் சென்றனர். மருத்துவ பரிசோதனையில், மாணவி பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டுள்ளது தெரியவந்தது.
அதிர்ச்சியடைந்த பெற்றோர், மறுநாள் காலை பள்ளிக்குச் சென்று முறையிட்டனர். ஆனால், `பள்ளியின் பெயரை வெளியில் சொல்லக் கூடாது’ என்றுகூறி நிர்வாகம் தரப்பில் மிரட்டியதாக பெற்றோர் தரப்பினர் தெரிவிக்கின்றனர்.அதையடுத்து, வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் புகார் அளித்தனர். அடையாளம் தெரியாத அந்த நபர் மீது `போக்ஸோ’ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீஸார், அந்த நபரைத் தீவிரமாகத் தேடிவருகிறார்கள்.
அதே சமயம், பள்ளிக் கழிவறையில் மாணவிக்கு நடந்த கொடூரத்துக்கு தலைமை ஆசிரியர் மற்றும் உதவித் தலைமை ஆசிரியர் மீதும் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Sai Surya
Contact at support@indiaglitz.com