2ஜி வழக்கின் தீர்ப்பு தேதி அறிவிப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
2ஜி வழக்கின் தீர்ப்பு தேதி இன்று மதியம் அறிவிக்கப்படும் என சிபிஐ நீதிமன்றம் இன்று காலை அறிவித்துள்ளது குறித்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் அக்டோபர் 25ஆம் தேதி இந்த வழக்கின் தீர்ப்பு வெளியாகும் என்று சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி உத்தரவிட்டுள்ளர்.
மன்மோகன்சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது 2ஜி ஏலத்தில் ரூ.176,000 கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாக கணக்கு தணிக்கை அதிகாரி குற்றஞ்சாட்டியிருந்தார். இதன் அடிப்படையில் சிபிஐ நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு முன்னாள் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி எம்பி ஆகியோர் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் இருவரும் சில மாதங்கள் கழித்து ஜாமீனில் வெளிவந்தனர்.
இந்த வழக்கு கடந்த ஆறு வருடங்களாக நடைபெற்று வந்த நிலையில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் தற்போது தீர்ப்பு தேதி அக்டோபர் 25 என அறிவிக்கப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout