காவல்துறையில் புகார் அளித்த சூர்யாவின் 2D நிறுவனம்: காரணம் இதுதான்!
- IndiaGlitz, [Wednesday,August 25 2021]
சூர்யாவின் 2டி நிறுவனத்தின் சார்பில் காவல்துறையில் புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து 2டி நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி, எங்கள் லோகோவையும் பயன்படுத்தி போலி மின்னஞ்சல் மூலம் சில மோசடியான நபர்கள் சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்து இருப்பதை அறிந்தோம். இந்த ஏமாற்று வேலை குறித்து காவல்துறையில் புகார் அளித்துள்ளோம்
2டி என்டர்டெய்ன்மென்ட் பிரைவேட் லிமிடெட் சார்பில் ஆடிஷன் நடத்துவதாகவும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இது முழுக்க முழுக்க பொய்யான தகவல். எங்கள் நிறுவனத்தைப் பொறுத்தவரை இது போன்ற ஆடிஷன் நடத்துவதில்லை. எங்கள் நிறுவனம் தயாரிக்கும் படத்தின் இயக்குனர் குழுவினரால் மட்டுமே அவர்களது அலுவலகத்தில் ஆடிஷன் நடத்தப்படும்
மேலும் ஆடிஷன்களுக்கு நாங்கள் எந்தவித கட்டணமும் வசூலிப்பதில்லை. எங்கள் நிறுவனத்தின் பெயர் மற்றும் லோகோவை தவறாக பயன்படுத்தி மோசடியில் ஈடுபடும் நபர்கள் குறித்து 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் காவல்துறையில் புகார் அளித்துள்ளது. எனவே இத்தகைய போலியான விளம்பரங்களை நம்பி பொதுமக்கள் தங்களுடைய ரகசிய தகவல்களை பகிர வேண்டாம் என்றும் மிகுந்த எச்சரிக்கை மற்றும் கவனத்துடன் இருக்குமாறும் இதன்மூலம் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
BEWARE!!
— 2D Entertainment (@2D_ENTPVTLTD) August 25, 2021
IMPOSTER ALERT!
We came to know that some fraudulent person has created a fake email ID (2dentertainment.gokul@gmail.com) using the name of 2D Entertainment, along with our logo, and inviting gullible persons for auditions and soliciting certain payments. pic.twitter.com/I2yrVMxT0v