'வேதாளம்' படத்தின் மூலம் மீண்டும் அஜீத்துடன் இணைந்த பிரபலம்

  • IndiaGlitz, [Wednesday,September 30 2015]

அஜீத் நடித்த 'பில்லா' மற்றும் 'ஆரம்பம்' ஆகிய படங்களில் அவர் மிகவும் ஸ்டைலிஷான காஸ்ட்யூமில் தோன்றியிருந்ததாக பல விமர்சனங்களில் நாம் பார்த்ததை மறந்திருக்க மாட்டோம். இந்த பாராட்டுக்கள் அனைத்தும் இந்த படங்களில் காஸ்ட்யூம் டிசைனராக பணிபுரிந்த அனுவர்தன் அவர்களை போய் சேரும்.

பில்லா, ஆரம்பம் படங்களை அடுத்து மீண்டும் காஸ்ட்யூம் டிசைனர் அனுவர்தன் வேதாளம்' படத்திலும் அஜீத்துடன் இணைந்துள்ளார். இந்த படத்தில் அஜீத் நடித்துள்ள மூன்று விதமான கெட்டப்புகளின் அட்டகாச தோற்றத்திற்கு அனுவர்தனின் ஸ்டைலிஷான காஸ்ட்யூம் டிசைனும் ஒரு முக்கிய காரணம் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக பிளாஷ்பேக்கில் ரெட் பட கெட்டப்பில் காதில் தோடுடன் அஜீத் தோன்றும் கெட்டப்பில் அனுவர்தன் அவர்களின் பணி மகத்தானது என்று படக்குழுவினர் அனைவரும் அவரை பாராட்டியுள்ளனர்.