விஜய் பாராட்டிய பேய்ப்படம்
- IndiaGlitz, [Saturday,January 31 2015]
ஐ, ஆம்பள என இரண்டு ஸ்டார் படங்களுக்கு மத்தியில் கடந்த பொங்கல் தினத்தில் வெளியான ஜி.வி.பிரகாஷ் குமாரின் 'டார்லிங்' படம் எதிர்பாராத வெற்றியை பெற்று படக்குழுவினர்ககளுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த படத்திற்கு மேலும் ஒரு மகுடம் சேர்க்கும் விதமாக இளையதளபதி விஜய் நேற்று சென்னை ஃபோர்பிரேம் தியேட்டரில் ஏற்பாடு செய்யப்பட்ட ஸ்பெஷல் ஷோ ஒன்றில் 'டார்லிங்' படத்தை பார்த்துவிட்டு படக்குழுவினர்களை பெரிதும் பாராட்டியுள்ளார்.
விஜய்யுடன் டார்லிங் படத்தில் காஸ்ட்யூம் டிசைனராக பணிபுரிந்த "ஜாய் கிரிஸ்ஸில்டா" அவர்களும் இணைந்து படம் பார்த்தார். இதுகுறித்து ஜாய் தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, 'இளையதளபதியின் பாராட்டு பெரும் சந்தோஷத்தை கொடுத்ததாகவும், கூறியுள்ளார்.
ஜி.வி.பிரகாஷின் நடிப்பு மற்றும் காமெடி கலந்த த்ரில் திரைக்கதையை விஜய் ரசித்து பார்த்து பாராட்டியதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இளையதளபதியின் பாராட்டை அடுத்து படக்குழுவினர் பெரும் உற்சாகம் அடைந்துள்ளனர்.