close
Choose your channels

'தல 57' படத்தில் அஜித் கேரக்டர் என்ன? புதிய தகவல்

Thursday, June 23, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தல அஜித் நடிக்கவுள்ள 57வது படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ள நிலையில் இந்த படத்தில் அஜித் FBI அதிகாரியாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
சிறுத்தை சிவா இயக்கிய 'வீரம்' மற்றும் 'வேதாளம்; ஆகிய இரண்டு படங்களிலுமே அஜித், நெகட்டிவ் ஹீரோவாக நடித்த நிலையில் இந்த படத்தில் ஹாலிவுட் ஸ்டைலில் அஜித்தின் FBI கெட்டப் இருக்கும் என்று கூறப்படுகிறது.
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கவுள்ள இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல் இந்த படத்தின் வில்லன் வேடத்தில் நடிக்க சசிகுமார், விஜய்சேதுபதி போன்ற ஹீரோக்களிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் விரைவில் வில்லன் யார்? என்பது உறுதி செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.
முழுக்க முழுக்க வெளிநாட்டில் படமாக்கப்படவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ளதாகவும், இந்த படம் வரும் 2017ஆம் ஆண்டு பொங்கல் திருநாள் அல்லது கோடை விடுமுறையில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment