close
Choose your channels

சாய்பாபா பக்தையாக மாறிய 'கபாலி' நடிகை?

Saturday, August 22, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பேராண்மை, மாஞ்சாவேலு, அரவான் மற்றும் பாலாவின் பரதேசி போன்ற பல படங்களில் நடித்த நடிகை தன்ஷிகா தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகளாக 'கபாலி' படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் தன்ஷிகா தனது பெயரை சாய்தன்ஷிகா என மாற்றிக்கொண்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.


'அரவான்' படத்தில் நடித்தபோது தன்ஷிகாவுக்கு பல்வேறு பிரச்சனைகள் இருந்ததாகவும், அவருடைய தோழி ஒருவரின் அறிவுரைப்படி அவர் சாய்பாபாவை தொடர்ந்து வழிபட ஆரம்பித்ததும், அவருக்கு இருந்த பிரச்சனைகள் அனைத்தும் படிப்படியாக தீர்ந்துவிட்டதாகவும், இதன் காரணமாக தான் ஒரு சாய்பாபா பக்தையாக மாறி, தன்னுடைய பெயரை சாய்தன்ஷிகா என மாற்றியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தனக்கு சூப்பர்ஸ்டார் படத்தில் நடிக்க வாப்பு கிடைத்தது கூட சாய்பாபாவின் அருளால்தான் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளதாகவும் அவரது தரப்பில் இருந்து கூறப்படுகிறது. 'கபாலி' படத்திற்கு பின்னர் தன்ஷிகா கோலிவுட்டில் கவனிக்கப்படக்கூடிய ஒரு நடிகையாக மாறிவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 'கபாலி'யை தவிர தன்ஷிகா 'திறந்துவிடு சீசே' என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment