3000ஐ நெருங்கியது ஒருநாள் கொரோனா பாதிப்பு: தமிழக கொரோனா நிலவரம்

தமிழகத்தில் கடந்த 8 நாட்களாக கொரோனா வைரஸின் பாதிப்பு தினமும் இரண்டாயிரத்தை தாண்டியது என்பதும் குறிப்பாக நேற்று கடந்த சில நாட்களாக 2500க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று தமிழகத்தில் 3000ஐ நெருங்கிவிட்டது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது

தமிழக சுகாதாரத்துறையின் தகவலின்படி தமிழகத்தில் இன்று 2865 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67,468 என அதிகரித்துள்ளது. மேலும் சென்னையில் இன்று கொரோனா தொற்றால் 1654 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 45,814ஆக உயர்வு என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

மேலும் தமிழகத்தில் இன்று கொரோனாவால் 33 பேர் மரணம் அடைந்துள்ளதால் தமிழகத்தில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 866 ஆக அதிகரித்துள்ளது என்பது அதிர்ச்சிக்குரிய செய்தி ஆகும்.

மேலும் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதித்த 2424 பேர் குணமடைந்துள்ளனர் என்பது தான் ஒரே ஆறுதல் என்பதும், இதனையடுத்து பேர் மொத்தம் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து 37,763 பேர்கள் குணமாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இன்று தமிழகத்தில் 29,655 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாகவும், இதனையடுத்து தமிழகத்தில் மொத்தம் 930,367 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாகவும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

More News

நீண்ட நாள் காதலியை கரம் பிடித்தார் கும்கி நடிகர்: திரையுலகினர் வாழ்த்து 

இயக்குனர் எம் ராஜேஷ் இயக்கிய 'பாஸ் என்ற பாஸ்கரன்' என்ற திரைப்படத்தில் நகைச்சுவை நடிகராக அறிமுகமான தயாரிப்பாளர் சுவாமிநாதனின் மகன் அஸ்வின்

வாயில் ஊறும் எச்சிலை வைத்து கொரோனா பரிசோதனை!!! புது முயற்சியில் இறங்கிய விஞ்ஞானிகள்!!!

கொரோனா பரிசோதனைக்கு மாதிரிகள் சேகரிக்கும் பணி இதுவரை கடினமாகவே இருந்து வருகிறது.

ஆபாச படம் பார்த்த சிறுவனின் வீட்டிற்கு ஆடையின்றி சென்ற ஆபாச நடிகர், நடிகை: அதிர்ச்சி வீடியோ

நியூசிலாந்து நாட்டில் ஆபாச படம் பார்த்த சிறுவனின் வீட்டிற்கு அவர் பார்த்த ஆபாச படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகை ஆடையின்றி நிர்வாணமாக சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

ஒரே பிரசவத்தில் பிறந்த 3 குழந்தைகளுக்கு கொரோனா!!! சாத்தியமே இல்லை என மருத்துவர்கள் அதிர்ச்சி!!!

மெக்சிகோவில் ஒரே பிரவசத்தில் ஒரு பெண்ணிற்கு 2 ஆண் குழந்தை மற்றும் 1 பெண் குழந்தை பிறந்தது

கல்வான் தாக்குதலில் 40 சீன இராணுவ வீரர்கள் உயிரிழப்பா??? சீனா என்ன சொல்கிறது???

கடந்த ஜுன் 15 ஆம் தேதி கிழக்கு லடாக் பகுதியில் உள்ள கல்வான் மலை பள்ளத்தாக்கு பகுதியில் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் நடைபெற்ற கைக்கலப்பில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர்.