close
Choose your channels

தமிழ்ராக்கர்ஸ் அட்மின்கள் கைதை அடுத்து அடுத்த அதிரடி

Friday, March 16, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்து திரைப்படம் வெளியாகும் அன்றே இணையதளத்தில் திருட்டுத்தனமாக ஒளிபரப்பி வந்த தமிழ் ராக்கர்ஸ் அட்மின்கள் ஐந்து பேர் நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டதாக வெளிவந்த செய்தியை நேற்று பார்த்தோம். இதனால் தமிழ் திரையுலகினர் தற்போது நிம்மதி பெருமூச்சுவிட்டுள்ளனர்.

இந்த நிலையில் அடுத்த அதிரடியாக புதிய திரைப்படங்களை திருட்டுத்தனமாக பதிவேற்றிவந்த 28 இணையதளங்களை காவல்துறை முடக்கியுள்ளது. தயாரிப்பாளர் சங்கத்தின் புகார்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்துள்ளதாகவும், இந்த 28 இணையதளங்களின் அட்மின்கள் குறித்த விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

ஆன்லைன் பைரஸியை ஒழித்துவிட்டாலே சினிமாத்துறையில் உள்ள பாதி பிரச்சனைகள் தீர்ந்துவிடும். குறிப்பாக நடிகர் விஷால் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் ஆனதில் இருந்து ஆன்லைன் பைரசியை மீதான நடவடிக்கைகள் சுறுசுறுப்பாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment