லெபனானில் வெடித்து சிதறிய 2,750 டன் அமோனியம் நைட்ரேட்!!! பரபரப்புச் சம்பவம்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
லெபனான் நாட்டின் தலைநகர் பெய்ரூட்டின் அருகேயுள்ள துறைமுகத்தில் ஏற்ட்ட ஒரு வெடிவிபத்தால் ஒட்டுமொத்த தலைநகரும் தற்போது ஆரஞ்சு நிறத்தில் காட்சியளிப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. பெய்ரூட் முழுவதும் ஆரஞ்சு வண்ணத் தீப்பிளம்வுகளாகவும் கரும்புகை மேகமூட்டமுமாக இருக்கிறது. துறைமுகத்தின் ஒரு இடத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தால் இப்படி தீப்பிளம்பு ஏற்படுவதாகச் செய்திகள் தெரிவித்த நிலையில் தற்போது தீ விபத்து எதனால் ஏற்பட்டது என்பதை குறித்து அந்நாட்டின் பிரதமர் தெளிவுப் படுத்தியிருக்கிறார்.
துறைமுகத்தின் ஒரு இடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த 2,750 கிலோ அமோனியம் நைட்ரேட் வெடித்தால் இந்தத் தீப்பிளம்பு ஏற்பட்டு இருபபதாகவும் இதனால் 73 பேர் உயிரிழந்து இருப்பதாகவும் பிரதமர் ஹசன் டியப் தெரிவித்து உள்ளார். மேலும் 3,700 பேருக்கு படுகாயம் ஏற்பட்டு மருத்துமனைகளில் அனுமதிக்கப் பட்டுள்ளதாகவும் அந்நாட்டின் சுகாதாரத்துறை கூறியிருக்கிறது. சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டிருந்த அமோனியம் நைட்ரேட் சரியாகப் பராமரிக்கப்படாமல் இருந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாகவும் தற்போது குற்றச்சாட்டு வைக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த பிரதமர், “எந்தவித பாதுகாப்பு நடைமுறைகளும் பின்பற்றப்படாமல் மக்களுக்கு ஆபத்து தரக்கூடிய வகையில் பெய்ரூட் துறைமுகத்தில் உள்ள சேமிப்பு கிடங்கில் 6 ஆண்டுகளாக 2 ஆயிரத்து 750 டன் அமோனியம் நைட்ரேட் வேதிப்பொருள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இதனால் தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. இந்த பிரச்சனையை சகிக்ததுக்கொண்டு இருக்க மாட்டேன்” என்று காட்டமாகக் கூறியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout