லெபனானில் வெடித்து சிதறிய 2,750 டன் அமோனியம் நைட்ரேட்!!! பரபரப்புச் சம்பவம்!!!

  • IndiaGlitz, [Wednesday,August 05 2020]

 

லெபனான் நாட்டின் தலைநகர் பெய்ரூட்டின் அருகேயுள்ள துறைமுகத்தில் ஏற்ட்ட ஒரு வெடிவிபத்தால் ஒட்டுமொத்த தலைநகரும் தற்போது ஆரஞ்சு நிறத்தில் காட்சியளிப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. பெய்ரூட் முழுவதும் ஆரஞ்சு வண்ணத் தீப்பிளம்வுகளாகவும் கரும்புகை மேகமூட்டமுமாக இருக்கிறது. துறைமுகத்தின் ஒரு இடத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தால் இப்படி தீப்பிளம்பு ஏற்படுவதாகச் செய்திகள் தெரிவித்த நிலையில் தற்போது தீ விபத்து எதனால் ஏற்பட்டது என்பதை குறித்து அந்நாட்டின் பிரதமர் தெளிவுப் படுத்தியிருக்கிறார்.

துறைமுகத்தின் ஒரு இடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த 2,750 கிலோ அமோனியம் நைட்ரேட் வெடித்தால் இந்தத் தீப்பிளம்பு ஏற்பட்டு இருபபதாகவும் இதனால் 73 பேர் உயிரிழந்து இருப்பதாகவும் பிரதமர் ஹசன் டியப் தெரிவித்து உள்ளார். மேலும் 3,700 பேருக்கு படுகாயம் ஏற்பட்டு மருத்துமனைகளில் அனுமதிக்கப் பட்டுள்ளதாகவும்  அந்நாட்டின் சுகாதாரத்துறை கூறியிருக்கிறது. சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டிருந்த அமோனியம் நைட்ரேட் சரியாகப் பராமரிக்கப்படாமல் இருந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாகவும் தற்போது குற்றச்சாட்டு வைக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த பிரதமர், “எந்தவித பாதுகாப்பு நடைமுறைகளும் பின்பற்றப்படாமல் மக்களுக்கு ஆபத்து தரக்கூடிய வகையில் பெய்ரூட் துறைமுகத்தில் உள்ள சேமிப்பு கிடங்கில் 6 ஆண்டுகளாக 2 ஆயிரத்து 750 டன் அமோனியம் நைட்ரேட் வேதிப்பொருள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இதனால் தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. இந்த பிரச்சனையை சகிக்ததுக்கொண்டு இருக்க மாட்டேன்” என்று காட்டமாகக் கூறியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

More News

கொரோனா தனிமை: பிரத்யேக முறையில் அம்மா கோவிட்-19 திட்டத்தைத் துவக்கி வைத்த தமிழக முதல்வர்!!!

தமிழகத்தில் கடந்த ஜுலை மாதத்தைவிட கொரோனாவில் இருந்து குணமடைவோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகச் சுகாதாரத்துறை தெரிவித்து இருக்கிறது

ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற காமெடி நடிகரின் மகன்: முதல் முயற்சியிலேயே தேர்ச்சி

பொதுவாக சினிமா நடிகர் நடிகைகளின் வாரிசுகள் சினிமாவில் அறிமுகமாகி வெற்றி பெற்று வரும் நிலையில் பிரபல காமெடி நடிகர் சின்னி ஜெயந்த் மகன் முதல்

ஓடிடியில் 'மாஸ்டர்' ரிலீஸா? தயாரிப்பு தரப்பின் அதிகாரபூர்வ தகவல்

கொரானா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த நான்கு மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டு இருக்கும் நிலையில் ரிலீசுக்குத் தயாராக இருக்கும் பல திரைப்படங்கள் ஓடிடியில் ரிலீஸ் ஆகி வருகின்றன

லெபனான் தலைநகரில் பயங்கர வெடிவிபத்து: 100 அடி தூரத்திற்கு கட்டிடங்கள் சேதம்

லெபனானின் தலைநகர் பெய்ரூட் என்ற நகரில் நேற்று நிகழ்ந்த ஒரு பயங்கர வெடிப்பு விபத்து, அந்நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த வெடி விபத்து குறித்த சேதங்கள்

தென் மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செய்யும் முதல்வர்: கலெக்டர்களுடன் ஆலோசனை செய்கிறார்!

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான நடவடிக்கையை தமிழக சுகாதாரத் துறையினர் தீவிரமாக எடுத்து வரும் நிலையில் தென் மாவட்டங்களில் தற்போது